சென்னையில் தங்கம் விலை சரசர சரிவு
Recommended Video
சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ஆபரண தங்கம் ஒரு சவரன் 28,856 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று நாடு முழுக்க மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய விலைகள் குறைந்தது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வது, உள்நாட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் விலை சரிவுக்கு பின்னணி காரணமாம்.

உலகளவில், தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் 1,550 டாலர்களிலிருந்து 4% க்கும் குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் அக்டோபரில் அடுத்த சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. அப்போது வணிக ரீதியிலான மோதலில் தீர்வுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை சென்னையிலும் சரிவை சந்தித்துள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications