Gold Rate Today: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! சென்னை ரேட் என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது சவரன் ரூ 59,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராம் ரூ 109 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் அக்டோபர் 30-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கிராமுக்கு ரூ 65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் ரூ 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனை விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் அக்டோபர் 18 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. ஒரு கிராம் விலை ரூ 7240 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,920 க்கு விற்பனையானது.
சென்னையில் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 320 உயர்ந்தது. இதன் மூலம் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாயும், ஒரு கிராம் ரூ 7280க்கும் விற்பனை செய்யப்பட்டது. சவரன் ரூ 58 ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஒரு சவரன் ரூ 58,240-க்கு விற்பனை செய்யப்பட்டதுது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 2 உயர்ந்து கிராம் ஒன்று ரூ 107-க்கும் ஒரு கிலோ 1,07,000 க்கும் விற்பனையானது.
அக்டோபர் 20ஆம் தேதி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 7280-க்கு விற்பனையானது. அது போல் 21 ஆம் தேதி ரூ 20உயர்ந்து ஒரு கிராம் ரூ 7300 க்கு விற்பனையானது. அக்டோபர் 22 ஆம் தேதியும் எந்த மாற்றமும் இல்லை, 23 ஆம் தேதி ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7340 க்கு விற்பனையானது.
அது போல் 24 ஆம் தேதி ரூ 55 குறைந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 7285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 25ஆம் தேதி கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7292 க்கு விற்பனையானது.
சென்னையில் அக்டோபர் 26 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 520 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்தை எட்டியது. அதாவது சென்னையில் ஒரு சவரன் ரூ 58,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் சென்னையில் ஒரு கிராம் ரூ 7,360-க்கு விற்கப்பட்டது.
சென்னையில் அக்டோபர் 28 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கு விற்பனையாகிறது.
சென்னையில் அக்டோபர் 29 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 480 உயர்ந்தது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ 7375 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் வெள்ளியின் விலை கிராம் ரூ 108 ஆக இருந்தது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications