மிடில் கிளாஸ் மக்கள் தங்கம் வாங்குறதா வேண்டாமா? இப்படி உயருதே! சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 600 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் தங்கத்தின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆடி மாதம் முடிய இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருக்கிறது.
சென்னையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,400 க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 75 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,425 க்கு விற்பனையாகிறது.

அது போல் வெள்ளியின் விலை ரூ 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனால் அன்றே தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 2,200 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு சரிந்து கொண்டே வந்த தங்கம் திடீரென 160 ரூபாய் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த நாளே ரூ 160 குறைந்தது. இப்படியாக சீசா விளையாடிக் கொண்டிருந்த தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை முழம் ஏறுவது, ஜான் சறுக்குவதுமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து கிராம் ரூ 6470க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் 51,760 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கிராமுக்கு ரூ 70 குறைந்து பவுனுக்கு ரூ 560 மேலும் சரிந்து ஒரு கிராம் ரூ 6,330 க்கும் ஒரு சவரன் ரூ 50,640 க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 87 க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றைய தினம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ 6350 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு பவுன் ரூ 50,800க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 86.50 க்கும் ஒரு கிலோ ரூ 86,500க்கும் விற்பனையானது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications