50 ஆயிரத்திற்கு கீழ் தங்கம் விலை குறைவது போல் வந்து! குபீர்னு ஏறிடுச்சே! சென்னையில் இன்று ரேட் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 160 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் ரூ 600 உயர்ந்ததை அடுத்து தொடர்ந்து இன்றும் ஏறுமுகத்திலேயே தங்கம் இருப்பதால் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,560 க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,445 க்கு விற்பனையாகிறது.

அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக சவரனுக்கு ரூ 920 உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனால் அன்றே தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 2,200 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு சரிந்து கொண்டே வந்த தங்கம் திடீரென 160 ரூபாய் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த நாளே ரூ 160 குறைந்தது. இப்படியாக சீசா விளையாடிக் கொண்டிருந்த தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை முழம் ஏறுவது, ஜான் சறுக்குவதுமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து கிராம் ரூ 6470க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் 51,760 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கிராமுக்கு ரூ 70 குறைந்து பவுனுக்கு ரூ 560 மேலும் சரிந்து ஒரு கிராம் ரூ 6,330 க்கும் ஒரு சவரன் ரூ 50,640 க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 87 க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ 6350 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு பவுன் ரூ 50,800க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 86.50 க்கும் ஒரு கிலோ ரூ 86,500க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,400 க்கு விற்பனையாகனது. அதாவது கிராமுக்கு ரூ 75 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,425 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
-
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications