Gold Rate in Madurai: விர்ர்னு எகிறிய தங்கம்.. மீண்டும் உச்சம்! கோவை, மதுரையில் இன்று என்ன விலை?

Subscribe to Oneindia Tamil

மதுரை/ கோவை: தங்கம் விலை இன்று மதுரை, கோவையில் சவரனுக்கு ரூபாய் 1200 உயர்ந்துள்ளது. நேற்று ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 67,280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூபாய் 68,280 ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வந்தது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்து வந்தது.

Gold Price Jumps by 1 200 in Madurai and Coimbatore Now at 68 280 per Sovereign

மதுரை - கோவை தங்கம் விலை

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில் குறைந்து வந்தது. நேற்று முன்தினம் வரை 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூபாய் 2,680 குறைந்தது.

தங்கம் விலை கடந்த 4 ஆம் தேதி ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5 ஆம் தேதி கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கித் திரும்பியது. மதுரையில் நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்தது. நேற்று மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1,200 உயர்ந்துள்ளது. கோவை, மதுரையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை, மதுரையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 150 உயர்ந்து ரூபாய் 8,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை - கோவை - இன்றைய 22 காரட் தங்க விலை நிலவரம்

1 கிராம் - ரூபாய் 8,560

1 சவரன் - ரூபாய் 68,480

மதுரை - கோவை - இன்றைய 24 காரட் தங்க விலை நிலவரம்

1 கிராம் - ரூபாய் 9,338

1 சவரன் - ரூபாய் 74,704

மதுரை - கோவை - இன்றைய 18 காரட் தங்க விலை நிலவரம்

1 கிராம் - ரூபாய் 7,090

1 சவரன் - ரூபாய் 56,720

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+