தங்கம் விலை இன்றும் பெரும் சரிவு.. ஒரு பவுன் தங்கம் 50000க்கு கீழ் வர வாய்ப்பு.. இன்றைய விலை விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.51,440க்கும் ஒரு கிராம் ரூ.6,430க்கும் விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரியை 6 சதவீதமாக குறைத்ததால் தொடர் சரிவு ஏற்பட்டிருக்கிறது. வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் சரிவினை சந்தித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை தாறுமாறாக ஏறிவந்த நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே (நேற்று முன்தினம்) ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் குறைந்தது. தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறையாகும். இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே இருந்தது.

gold chennai

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 490-க்கும், ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் குறைந்து இருந்தது. இதன் மூலம் தங்கம் விலை 110 நாட்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.52 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்நிலையில் தங்கம் விலை 3வது நாளாக இன்றும் அதிரடியாக குறைந்தது. ஜூலை 25 ஆம் தேதியான 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.60 குறைந்து ரூ.6430 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ஒரு கிராம் ரூ.5267- க்கும், சவரனுக்கு ரூ.392 குறைந்து ஒரு சவரன் ரூ.42,136க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்து கொண்டேதான் இருக்கிறது. நேற்றும் கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.92-க்கும், ஒரு கிலோ ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.89 க்கும் ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். விலை குறைந்து கொண்டே வருவதால் ஒரு சவரன் விலை 50000க்கு கீழ் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீது ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+