ஆஹா.. தங்கம் விலை ரூ.6000க்கு கீழ் போக வாய்ப்பு இருக்கு.. ஆனந்த் சீனிவாசன் குட் நியூஸ்! என்ன காரணம்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே வரும் காலத்தில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். ஏன் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.. எந்தளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை பெரியளவில் சரிந்த நிலையில், அதன் பிறகு பெரிதாக அதிகரிக்கவில்லை. கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5 மட்டுமே ஏறி இருக்கிறது.

தங்கம் விலை: சில நாட்கள் அதிகரிப்பதும் சில நாட்கள் குறைவதுமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,425 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலை இப்படி பெரிதாக அதிகரிக்காமல் இருப்பது மிடில் கிளாஸ் மக்களிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "தங்கம் விலை பெரிதாக ஏறவில்லை. அதாவது சர்வதேச சந்தையில் எங்கெல்லாம் லாபம் இருக்கிறதோ.. அதையெல்லாம் விற்று நஷ்டத்தைக் கவர் செய்து வருகிறார்கள். தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் மட்டுமே 15-20% லாபம் கிடைத்தது. அந்த லாபத்தை விற்றே மற்ற இடங்களில் அடைந்த நஷ்டம் அல்லது கட்ட வேண்டிய பணத்தைக் கட்டியுள்ளனர்.
இதன் காரணமாகத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.6000க்கு கீழே போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பங்குச்சந்தை பெரியளவில் விழுந்தால்.. அதில் ஏற்பட்ட நஷ்டத்தைக் கவர் செய்யத் தங்கத்தை விற்பார்கள். இதனால் சந்தையில் நிறையத் தங்கம் வந்து விலை குறையும். ஆனால், தங்கம் விலை குறிப்பிட்ட லெவலுக்கு கீழ் குறைந்தால், பலரும் அதை வாங்க முற்படுவார்கள்.
அமெரிக்க மத்திய வங்கி: இது நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எப்போது நடக்கும் எனச் சொல்ல முடியாது. அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போதும் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்" என்றார்
அதாவது பொதுவாகச் சர்வதேச அளவில் இருக்கும் பெரும் முதலீட்டாளர்கள் தங்கம், பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் என்று பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்வார்கள். இதில் தங்கம் கணிசமான லாபத்தைக் கொடுத்தாலும் கூட மற்ற முதலீடுகளில் எதிர்பார்க்காத நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். அதைச் சமாளிக்கவே இப்போது தங்கத்தை விற்று அந்த நஷ்டத்தைக் கவர் செய்கிறார்கள்.
எப்போது அதிகரிக்கும்: அதேபோல தங்கம் விலை அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் உயரும். தங்கம் விலைக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அங்கு வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கம் விலை குறையும். இத்தனை காலம் அங்கு வட்டி விகிதம் அதிகமாக இருந்ததாலேயே தங்கம் விலை பெரிதாக ஏறவில்லை. அதேபோல வட்டி விகிதத்தை அங்குக் குறைத்தால் தங்கம் அதிகரிக்கத் தொடங்கும். வரும் செப். மாதம் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தங்கம் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications