ஆஹா.. தங்கம் விலை திரும்பவும் எகிறுதே.. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 35 உயர்ந்து ரூ.6,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 280 உயர்ந்து இன்று ஒரு சவரன் ரூ.53,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், இந்தியாவில் பொருளாதாரத்தில் பல்வேறு தட்டுகளில் இருக்கும் மக்களின் முக்கியமான முதலீடாக இருக்கிறது. சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது.

gold rate gold chennai

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்து வந்தது. அடுத்த ஒரே வாரத்தில் விலை சரிவு நின்று, அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6,800ஐ எட்டியது. அதன் பிறகு லேசாக சரிந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று கிராம் ஒன்று ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.53,440-க்கும் விற்பனையானது. ஆவணி மாதத்தில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உயர்வால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வைத்திருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. புதன் கிழமையான இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து ரூ.6,715 என்று விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு ரூ. 280 அதிகரித்து தற்போது ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கம் இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் நேற்று ரூ. 7,135 க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 7,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.57,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.91-க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 91.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.91,500 ஆக உள்ளது. அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை கடுமையான உயர்வைச் சந்திக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+