உலகம் முழுக்க உள்ள.. பொருளாதார புலிகளே குழம்பிட்டாங்களே.. தங்கம் விலை தந்த ட்விஸ்ட்.. என்னாச்சு?
சென்னை: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும், தங்கத்தின் விலை சரிந்து உள்ளது. பொருளாதார வல்லுனர்களையே குழப்பும் விதமாக, பொருளாதார வல்லுனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக தங்கத்தின் விலை சரிந்து உள்ளது.
சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,221.49 ஆக 0.2% சரிந்தது. அதேபோல் பிப்ரவரி மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.6% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,249.70 ஆக வர்த்தகமானது.

இந்திய உள்நாட்டு சந்தையைப் பொறுத்தவரை, தங்கம் விலைகள் சீராக இருந்தன. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹13,020 ஆகவும், 22 காரட் தங்கம் ₹11,935 ஆகவும், 18 காரட் தங்கம் ₹9,765 ஆகவும் விற்பனையானது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹13,146 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹12,050 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹10,045 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை சரிவு - குழப்பம்
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் நாளை இந்திய சந்தையில் தங்கம் விலை குறையும். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் 25 அடிப்படைப் புள்ளிகள் (basis points) வட்டி குறைப்பை நேற்று இரவு அறிவித்தது. இதனால் டாலர் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. வட்டி மதிப்பு குறைந்தால் டாலர் மதிப்பு குறையும். டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும்.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்வதேச சந்தையில் டாலர் விலை குறைந்த போதிலும் தங்கம் விலையும் குறைந்து உள்ளது. சர்வதேச பொருளாதார வல்லுனர்களை இது குழப்பி உள்ளது.
தங்கம் விலை மேலும் சரியும்
ANZ வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $4,400 ஆக உயரும் என்று கணித்துள்ளது. மேலும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டக்கூடும் என்றும், பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கொள்கைகளை தளர்த்தும் சுழற்சியை முடிக்கும்போது இரண்டாம் பாதியில் சரிவு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.
ANZ மேலும், "பெடரல் வங்கியின் சுதந்திரம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் குறித்த கவலைகள் தங்கத்தில் முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்" என்று தெரிவித்தது.
இந்த வங்கி, வெள்ளி விலையும் 2026-ம் ஆண்டு மத்தியப் பகுதிக்குள் ஒரு அவுன்ஸ்க்கு $57.50-ஐ எட்டும் என்று கணித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் கடுமையான நிலைப்பாடு மற்றும் எதிர்பார்ப்பை விட வலுவான அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆகியவை தங்கத்தின் விலையை குறைக்கும் அபாயங்களை உருவாக்கலாம் என்று ANZ எச்சரித்துள்ளது.
டாலர் மதிப்பில் தங்கம் வாங்குவது
ANZ வங்கி தனது கணிப்பில், இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,400 ஆக உயரும் என்றும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகித குறைப்பு சுழற்சியை முடித்த பிறகு, அடுத்த ஆண்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் ANZ குறிப்பிட்டது.அதாவது சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹12,983 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹11,901 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹9,831 ஆகவும் உள்ளது. இது 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10000 ஆக குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன,
மத்திய வங்கியின் தங்க கொள்முதல், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக தடைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்.. ஆனால் அது நீடிக்காது. ஒரு course correction தேவைப்படும். அது கண்டிப்பாக அடுத்த வருடம் இரண்டாம் பாதியில் நடக்கும். இதனால் கண்டிப்பாக விலை குறையும் என்று ANZ வங்கி தெரிவித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications