அட்சய திருதியை.. ஒரே வருஷத்தில் 43 ஆயிரம் கூடியது! இன்று தங்கம் வாங்க போறீங்களா? ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியை நாளான இன்று குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் வேறு என்பதால் இன்று நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை நிலவரம் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறியது. வெறும் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த தங்கம் விலை இப்போது 1.14 லட்சத்திற்கு எகிறிவிட்டது.

Akshaya Tritiya

விண்ணை முட்டிய தங்கம் விலை

குறையும் போது பெயரளவுக்கு மட்டுமே குறையும் தங்கம் விலை அதிகரிக்கும் போது மட்டும் ஒரே அடியாக உயர்ந்து ஷாக் கொடுக்கிறது. இதனால் சாமானிய மக்கள் பலரும், தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என அச்சமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அவர் விதிக்கும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால், பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமையே இந்த விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்கம் விலை இந்த அளவுக்கு உயர்ந்ததாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை பெரிய அளவில் உயராமலும், குறையாமலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் நேற்று அப்படியே உயர்ந்துவிட்டது.

இன்றைய ரேட் என்ன?

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் தங்கம் விலை உயர்வு நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற பேச்சு உண்டு.

இதனால் இன்றைய தினம் நல்ல நேரம் பார்த்து ஒரு கிராம் தங்கமாவது வாங்கி போட்டு விட வேண்டும் என பலரும் நகை கடைக்கு ஓடுவார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தங்கம் விலை நேற்றைய நிலவரப்படியே விற்பனை ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 19.04.2025- ஒரு சவரன் ரூ.71,560 ஆக விற்பனை ஆனது. ஒரே ஆண்டில் சுமார் 43 ஆயிரம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880 (இன்று)
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880 (நேற்று)
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560

14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+