அடிச்சு நொறுக்கி உச்சத்துக்கு போகும் தங்கம் விலை.. 59 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலையும் உயர்வு!
சென்னை: தங்கம் விலை ரூபாய் 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து, ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.7,340-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

தங்கம் விலை: கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை சரிவது நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க எண்ணும் மக்கள், நகைப் பிரியர்கள், இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இன்று அதிரடி உயர்வு: இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,340-க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூபாய் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை 47 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது 58 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதாவது, கடந்த 10 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 11,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த 10 மாதங்களில்: கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. தற்போது, ஒரு கிராம் ரூ.7,340-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூபாய் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உச்சத்தில்: தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ரூபாய் 112க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications