3 மாசமா.. 6 மாசமா.. தங்கம் விலை எப்போது அதிகரிக்க தொடங்கும்.. எந்தளவு உயரும்? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே இதேபோல நிலையாகத் தங்கம் விலை எத்தனை காலம் இருக்கும்.. வரும் காலத்தில் அது குறையுமா அல்லது அதிகரிக்குமா.. அப்படியே அதிகரித்தாலும் அது எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இந்தியாவில் தங்கம் தான் ஏழை மக்களுக்கு மிகச் சிறந்த சேமிப்பாகும். பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசனும் இதையே தொடர்ந்து கூறி வருகிறார்.

ஏழை மக்கள் தங்கள் கஷ்ட காலத்தில் உதவியாக இருக்கத் தங்கத்தை வாங்க வேண்டும் என்றே ஆனந்த் சீனிவாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அதேநேரம் தங்கம் விலை கடந்த சில காலமாக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், இது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் கேள்வியாகவே உள்ளது.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நம்ம ஊரில் நேற்று தங்கம் விலை ரூ.20 குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்தே உள்ளது. எனவே, தங்கம் விலை நிலையாகவே உள்ளது. தங்கம் விலை ரூ.20 முதல் ரூ.50 வரை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் செல்கிறது அவ்வளவு தான். சில மாதங்களுக்கு இதே நிலை தான் இருக்கும்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை இந்தாண்டு இறுதியில் குறைத்தால் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும். வட்டி விகிதத்தை எப்போது குறைக்கலாம்.. செப்டம்பர் மாதம் குறைக்கலாமா அல்லது டிசம்பர் மாதம் குறைக்கலாமா என்பது குறித்தே அமெரிக்காவில் விவாதம் நடந்து வருகிறது. அது குறித்து தகவல்கள் வரவரவே நமக்குத் தெளிவாகத் தெரியும்.
எப்போது உயரத் தொடங்கும்: டேட்டா பாயிண்டுகள் வரவரவே நமக்குத் தெரியும். சில டேட்டா பாயிண்டுகள் ஆதரவாகவும் சில டேட்டா பாயிண்டுகள் நெகடிவாகவும் இருக்கிறது. எனவே, இந்தாண்டு இறுதியில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டவுடன் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கும்" என்றார். அதாவது இந்தாண்டு இறுதியில் தங்கம் விலை நிச்சயம் உயரத் தொடங்கும் என்றாலும் அது செப். மாதமே அல்லது டிச. மாதமா என்பது அமெரிக்க மத்திய வங்கி கைகளில் தான் உள்ளது.
எந்தளவுக்கு உயரும்: முன்னதாக அவர் தனது மற்றொரு வீடியோவில் தங்கம் விலை இந்தாண்டு இறுதி முதல் உயரத் தொடங்கும் என்றும் அடுத்தாண்டே அது ரூ.8000ஐ தொட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். இதுவும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்தே மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி: சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்பது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்தே மாறுபடும். அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்தால் தங்கம் விலை குறையும், இத்தனை காலமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருந்ததே தங்கம் விலை அதிகரிக்காமல் இருக்கக் காரணமாகும்.
அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால் குறைத்தால் தங்கம் விலை விறுவிறுவென அதிகரிக்கும். இதன் காரணமாகவே அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியவுடன் தங்கம் விலை அதிகரிக்கும் என ஆனந்த் சீனிவாசன் தொடர்ந்து கூறி வந்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications