குறையும் தங்கம்! எப்போது விலை அதிகரிக்க தொடங்கும்? இப்போது வாங்குவது பெஸ்டா? ஆனந்த் சீனிவாசன் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை எதனால் குறைகிறது என்பதை விளக்கிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதற்கும் எளிமையாகப் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எப்போதும் சேமிப்பு குறித்துப் பேசி வருபவர் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். இவர் எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்யச் சொல்வார். ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களை எப்போதும் தங்கமே காக்கும் என்பது இவரது கருத்து.

அதாவது ஆபத்தான நேரங்களில் பங்கு, சொத்து என அனைத்தையும் விடத் தங்கம் பாதுகாப்பானது என்பது இவரது வாதம். மேலும், தங்கத்தை எங்கே எடுத்துச் சென்றாலும் அதற்கு இணையான பணத்தைக் கொடுப்பார்கள்.

ஆனந்த் சீனிவாசன்: இதன் காரணமாகவே ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என இவர் வலியுறுத்தி வருகின்றனர். 24 கேரட் தங்கம் அதிகபட்சமாக ஒரு கிராம் 6300 ரூபாயைக் கூட தாண்டியது. இப்போது சற்று குறைந்து ஒரு கிராம் 6000 என்ற அளவில் இருக்கிறது. கடந்த சில காலமாகவே தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், தங்கத்தை எப்போது வாங்கலாம் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆன்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

 Gold price will further decrease before before raising says Anand Srinivasan

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "தங்கம் இப்போது 5400 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இன்னும் இரண்டு முறை அமெரிக்கா வட்டி விகிதத்தை அதிகரித்தால், 5000 வரை வரும். ஆனால், கட்டாயம் தங்கம் அந்தளவுக்குக் குறையும் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், ரஷ்யா, துருக்கி, சீனா என்ன செய்யப் போகிறது என்பதைப் பொருத்தும் தங்க விலை இருக்கும்..

தங்கம்: சரியாக எது மிகக் குறைவான விலை என்பதை யாராலும் சொல்ல முடியாது. எனவே, இப்போது முதலே தங்கத்தை யாராக இருந்தாலும் வாங்கலாம். தங்க விலை குறைவதால் தங்க நகைக்கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பங்குகளும் விலையும் குறையும். 5300 ரூபாய்க்குத் தங்கம் வந்தால் அதை மெல்ல வாங்கத் தொடங்கலாம். வெறும் இரண்டே வருடத்தில் தங்கத்தின் விலை நிச்சயம் 7000 ரூபாய் வரை செல்லும்.

தங்கம் விலை குறைந்தால் தங்கத்தை விற்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரிக்கும். அமெரிக்காவின் மத்திய வங்கி நிச்சயம் வட்டி விகிதத்தை ஏற்றுவேன் என அறிவித்துள்ளது. ஒவ்வொரு முறை வட்டி விகிதம் உயரும் போதும் தங்கத்தின் விலை குறையும். தங்கத்தின் விலை இப்போதே மேலும் குறைந்திருக்க வேண்டும். ரஷ்யா, சீனா நாடுகள் அதிகம் வாங்கியதால் தான் எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை.

எப்போது உயரத் தொடங்கும்: வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும். அடுத்த ஒரு 15 மாதங்களுக்குத் தங்கத்தின் விலை இப்படியே தான் இருக்கும். அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் உயர்த்துவதை நிறுத்தினால், உடனடியாக தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கும்.

2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை நிச்சயம் 7000 ரூபாயைத் தொடும். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். தங்கத்தை வாங்க இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல் நமக்குக் கொடுத்த கிப்ட்டாக இதைப் பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+