நாளை அக்ஷய திருதியை.. தங்கம் விலை குறையுமா? இப்போது வாங்கலாமா- இரண்டே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: நமது நாட்டில் கடந்த சில காலமாகத் தங்கம் விலை குறையும் நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் தங்கத்திற்கு என்று எப்போதும் தனியாக ஒரு மவுஸ் இருக்கிறது. திருமணம் தொடங்கி அனைத்து நல்ல காரியங்களிலும் தங்கத்தை நம்மால் தவிர்க்க முடியாது. இதனால் பொதுமக்கள் எப்போதும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

அதிலும் நாளை அக்ஷய திருதியை வருவதால் மக்கள் தங்கத்தை நிச்சயம் வாங்கியே தீர வேண்டும் என்றே மக்கள் பலரும் கருதுவார்கள்.. தங்கம் என்பது ஒரு நல்ல சேமிப்பும் கூட.. இதன் காரணமாகவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்கிறார்கள்.
தங்கம்: ஏனென்றால் ஆபத்தான காலங்களில் நமக்குத் தங்கம் உதவுவதைப் போல எதுவுமே உதவாது. உங்கள் பெயரில் நிலமே இருந்தால் கூட அதைப் பணமாக மாற்றுவது கடினம்.. விற்க நினைத்தால் நாம் விரும்பும் விலைக்கு நிலத்தை வாங்க ஆட்கள் வருவார்கள் எனச் சொல்ல முடியாது. நாம் அவசரப்பட்டால் அதை வைத்தே நிலத்தின் விலையைக் குறைத்துக் கூட கேட்பார்கள். வங்கியில் வைப்பதும் கடினம்.. அது இது எனச் சொல்லி பணம் கையில் வர சில வாரங்களாவது ஆகிவிடும்.
ஆனால், தங்கம் கையில் இருந்தால் அப்படி இல்லை. மிக மிக எளிதாக அதை நம்மால் பணமாக மாற்றலாம். தங்கம் விலை மார்கெட்டில் வெளிப்படையாக இருப்பதால் சந்தை விலைக்கே தங்கத்தை விற்பனை செய்யலாம். அப்படியே விற்க மனசு வரவில்லை என்றாலும் வங்கிகளில் தங்கத்தை எளிதாக அடகு வைத்து பணத்தை வாங்கலாம். இப்படி தங்கத்தால் நமக்கு ஏகப்பட்ட பலன்கள் உள்ளன..
குறையுது தங்கம் விலை: இதன் காரணமாகப் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தொடர்ச்சியாகத் தங்கத்தைச் சேமிக்கச் சொல்கிறார். கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை அதிகரித்த நிலையில், சில காலமாக அது குறைந்து வருகிறது. நேற்று கூட தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.6630க்கு விற்கப்பட்டது. இதற்கிடையே வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
எப்படி இருக்கும்: என்னைப் பொறுத்தவரை அடுத்த ஜூன் மாதம் நடக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு குறைவு. அதிகபட்சம் டிசம்பர் மாதம் வட்டி விகிதத்தை அவர்கள் குறைக்கலாம். ஆனால், வட்டி விகிதம் குறைக்கப்படும் முன்பு அமெரிக்கப் பொருளாதாரம் மிகக் கஷ்டமான ஒரு காலத்திற்குச் சென்று வரலாம். எனவே, அது வரை தங்கம் விலை பெரியளவில் உயராது" என்றார்.
அமெரிக்கா: அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்திற்கும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதாவது அமெரிக்க வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை குறையும். அவர்கள் வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும். அமெரிக்கா தனது வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்று பலரும் நினைத்ததாலேயே தங்கம் விலை அதிகரித்தது.
ஆனால், இப்போது அமெரிக்க இந்தாண்டு இறுதி வரை வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு குறைவு என்று இப்போது தெளிவாகத் தெரிய வந்துள்ளதால் தங்கம் விலை மெல்லக் குறைகிறது. அதேநேரம் அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை எகிற ஆரம்பித்துவிடும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications