Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராக்கெட் வேகத்தில் பாயும் தங்கம்.. இப்போ மிஸ் பண்ணா இனி அவ்வளவுதான்! ஆனந்த் சீனிவாசன் நறுக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், இதற்கான காரணம் என்ன.. வரும் காலத்தில் தங்கம் விலை எங்கே செல்லும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமலேயே இருந்து வந்தது. ஆனால், சமீப நாட்களாக என்ன ஆனதோ தெரியவில்லை அது மடமடவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 Gold price will see step rise in next year says Anand Srinivasan

தங்கம் விலை எதற்காக இப்படி அதிகரிக்கிறது. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படிச் செல்லும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிகவும் எளிமையாக விளக்கியுள்ளார்.

தங்கம் விலை: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்க மத்திய வங்கி இன்னும் வட்டி விகிதத்தைக் குறைக்கவே தொடங்கவில்லை. அதற்குள் தங்கம் ஏற ஆரம்பித்துவிட்டது. பங்குகளுக்காவது பொருளாதார மந்தநிலை, வருமானம் போதியளவு இல்லை என்று சொல்லி அதை அடிப்பார்கள். ஆனால், தங்கத்திற்கு அதுபோல எதுவும் இல்லை. வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கினால் இது ராக்கெட் தான்.

அதாவது லாயத்தில் குதிரையைப் பிடித்து வைத்திருப்பது போலத் தான் இதுவும். வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தாலே தங்கம் விலை கிடுகிடுவென மேலே செல்ல ஆரம்பித்துவிடும். ஏனென்றால் தங்கத்தின் விலையைப் பொருளாதார மந்தநிலை எல்லாம் பாதிக்காது. இதன் காரணமாகவே தங்கத்தை வைத்து கடன் தரும் நிறுவனங்களின் பங்குகளையும் கூட நாம் பார்க்கலாம்.

ரூ. 7500க்கு செல்லும்: அதேபோல தங்கத்தை விற்பனை செய்யும் நிறுவனங்களையும் பார்க்கலாம். அதாவது தங்கம் விலை இப்போது சுமார் ரூ.6000இல் இருக்கிறது. இது வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கினால் 7,500 ரூபாய்க்குச் செல்லும். அப்போது இந்த நிறுவனங்கள் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் லாப சதவிகிதமும் அதிகரிக்கும்.

அவர்களுக்கு எத்தனை கிராம் விற்பனை ஆகிறது என்பதெல்லாம் முக்கியம் இல்லை. கிராம் அதிகமாக விற்கவில்லை என்றாலும் லாபம் அவர்களுக்கு அதிகரிக்கும். தங்கத்தின் விலை 20% அதிகரித்தாலே அதன் லாபம் 20% அதிகரிக்கும். அதுவே போதும். நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்" என்று கூறினார்.

டைட்டன் ரகசியம்: தொடர்ந்து டைட்டன் நிறுவனம் குறித்துப் பேசிய அவர், "நாட்டில் தங்க விற்பனையில் டைட்டன் தான் டாப் இடத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் சுவாரசியமானது. டைட்டன் நிறுவனம் தங்க விற்பனையில் எந்தவொரு மார்கெட்டிலும் முதலிடத்தில் இடத்தில் இருக்க மாட்டார்கள். ஆனால், எல்லா மார்கெட்களிலும் டாப் 5 இடங்களில் இருப்பார்கள். டெல்லியில் அவர்களுக்குக் கடை இருக்கும். மும்பையிலும் இருக்கும். திருச்சியிலும் இருக்கும்.

இதில் எந்தவொரு இடத்திலும் அவர்கள் டாப் இடத்தில் இல்லை என்றாலும் டாப் 5 இடங்களுக்குள் வந்துவிடுவார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவர்கள் டாப் இடத்தில் வந்துவிடுவார்கள். அவர்கள் எந்தவொரு மார்கெட்டிலும் முதல் இடத்தில் இருக்கத் தேவையில்லை. அனைத்து மார்கெட்டிலும் நல்ல இடத்தில் இருப்பது போதுமானதாக இருக்கிறது. இதுவே அவர்களின் யுக்தியாக இருக்கிறது" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+