Gold Rate Today: மீண்டும் சரசரவென எகிறிய தங்கம் விலை.. இன்று ரூ.1200 உயர்வு.. சென்னையில் என்ன ரேட்?
சென்னை: சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 1480 அதிகரித்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ரூபாய் 1200 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வந்தது.

தங்கம் விலை
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வந்தது தங்கம் விலை.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தன.
பங்குச்சந்தை சரிவு
பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்திருந்தது.
இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கித் திரும்பியது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் முறையாக தங்கம் விலை உயர்ந்தது. நேற்று காலையில் வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் நேற்று வணிகம் நிறைவடையும் போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1,200 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 150 உயர்ந்து ரூபாய் 8,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை நிலவரம்
10.04.205 - ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025 - ஒரு சவரன் ரூ.67,280
08.04.2025 - ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025 - ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025 - ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025 - ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025 - ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025 - ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025 - ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025 - ஒரு சவரன் ரூ.68,080












Click it and Unblock the Notifications