தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தங்கம் விலை ஏறிக்கிட்டே போகுதே..." என்று புலம்பியவர்களுக்கு மத்தியில், இப்போது ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த தங்கம், இப்போது சற்றே மூச்சிரைக்கத் தொடங்கியுள்ளது. இது வெறும் சாதாரண இறக்கமல்ல, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான 'சறுக்கல்' என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

Gold Prices Crash

தங்கம்: ஒரு நூற்றாண்டு கால சோகம்!

ப்ளூம்பெர்க் ஆய்வாளர் கேட்டி கிரீஃபீல்ட் (Katie Greifeld) கணிப்பின்படி, தங்கம் தொடர்ந்து 10 நாட்களாக விலை சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு முன்னதாக 1920-ம் ஆண்டு பிப்ரவரியில் தான் இப்படி ஒரு நீண்ட கால சரிவு ஏற்பட்டதாம். ஜனவரி மாத உச்சத்திலிருந்து சுமார் 27% வரை தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 4,090 டாலர் என்ற அளவில் தனது 'சப்போர்ட்' தளத்தைத் தொட்டு நிற்கிறது.

இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 2% வரை தங்கம் மீண்டிருப்பது, இந்தத் தொடர் சரிவுக்கு ஒரு 'முற்றுப்புள்ளி' வைக்கப்படுமோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றங்களுக்குப் பிறகு, தங்கம் இதுவரை 12% சரிவைக்கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமைதான் சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 'COMEX' தங்க முன்பே வர்த்தகத்தில் (Gold Futures), விலை 2.47 சதவீதம் குறைந்து 4,492 டாலராக வர்த்தகமானது.

டிஜிட்டல் தங்கம்: பிட்காயின் 'மாஸ்' காட்டுவது ஏன்?

தங்கம் ஒரு பக்கம் தடுமாறிக் கொண்டிருக்க, 'டிஜிட்டல் தங்கம்' என்று அழைக்கப்படும் பிட்காயின் (Bitcoin) 70,000 டாலர் என்ற இமாலய இலக்கைத் தாண்டி கெத்தாகப் பயணிக்கிறது. பிட்காயினுக்கும் தங்கத்திற்குமான அந்த 'ரேஷியோ' (Ratio) இப்போது 30% வரை உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு பிட்காயின் வாங்க வேண்டும் என்றால் இப்போது 16 அவுன்ஸ் தங்கம் கொடுக்க வேண்டும்!

பைட்ரீ (ByteTree) நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரி சார்லி மோரிஸ் இதுகுறித்துக் கூறுகையில், "2017-ல் ஒரு பிட்காயின் விலை ஒரு அவுன்ஸ் தங்கத்திற்குச் சமமாக இருந்தபோது பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். வரும் காலங்களில் ஒரு பிட்காயின் என்பது 40 அவுன்ஸ் தங்கத்திற்குச் சமமாக மாறவும் வாய்ப்புள்ளது" என்கிறார்.

தங்கம் முதலீடு எங்கே போகிறது?

பொதுவாக தங்கம் முதலில் ஏறும், அதன் பிறகு பிட்காயின் அதை முந்திக்கொண்டு ஓடும் என்பது சந்தை விதி. ஆனால், தற்போதைய சூழல் சற்று மாறுபட்டுள்ளது.

தங்கம் (Gold ETFs): கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோல்டு இடிஎஃப்-களில் (Gold ETFs) இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் வெளியேறியுள்ளன.

பிட்காயின் (Bitcoin ETFs): இதற்கு நேர்மாறாக, இந்த மாதத்தில் மட்டும் பிட்காயின் இடிஎஃப்-களுக்குள் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீடுகள் குவிந்துள்ளன.

பிட்காயின் விலை 20% வரை சரிந்திருந்தாலும், முதலீட்டாளர்கள் இன்னும் பிட்காயின் மீதே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் அதன் வலிமையை இழந்து வருகிறதா அல்லது இது ஒரு தற்காலிக சறுக்கலா என்பதுதான் இப்போது முதலீட்டாளர்களின் மில்லியன் டாலர் கேள்வி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+