தங்கம் விலை சரிவு! உயர்ந்த வெள்ளி விலை! சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் ரேட் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ 400 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சனிக்கிழமை ரூ 400 உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் அன்றைய தினமே தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து 4ஆவது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 குறைந்து சவரன் ரூ 51,320 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து ரூ 6415 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ 89 க்கு விற்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3,160 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதினர். கடந்த ஜூலை 17 ஆம் தேதி சவரன் விலை ரூ 55,360 க்கு விற்பனையானது. அதன் பிறகு ஜூலை 22 ஆம் தேதி சவரன் ரூ 54,600 க்கு விற்பனையானது.
கடந்த 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதாவது சுங்க வரி குறைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 24ஆம் தேதி கிராமுக்கு ரூ 275 குறைந்து ஒரு கிராம் ரூ 6,550 க்கு சவரனுக்கு ரூ 2200 குறைந்து சவரன் விலை ரூ 52,400க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கடந்த வியாழக்கிழமை 3ஆவது நாளாக கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ 6,430 க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ 480 குறைந்து ஒரு சவரன் விலை ரூ 51440 க்கு விற்பனையானது. தங்கம் விலை குறைந்ததை அடுத்து வெள்ளி விலையும் ரூ 3 குறைந்து கடந்த 5 தினங்களாக கிராம் ரூ 89 க்கு விற்பனையானது. அடுத்த நாள் மேலும் இந்த விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 சனிக்கிழமை உயர்ந்துவிட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 51,720 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,465 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 89 என மாற்றமில்லாமல் உள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மார்க்கெட்டுளுக்கு விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. ஒரு சவரன் ரூ 51,720 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ 6,465 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் ரூ 6415 க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 51,320 க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒரே விலையில் நீடித்த நிலையில் இன்று 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 89.50 க்கு விற்பனையாகிறது. சனிக்கிழமை ரூ 400 உயர்ந்து இன்று அதே 400 குறைந்துவிட்டது. தங்கத்தின் விலை சவரன் ரூ 50 ஆயிரத்தை எப்போது எட்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications