தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலாமா..? வேண்டாமா..? நிபுணர்கள் சொல்லும் முக்கிய பாயின்ட்!
தங்கம் விலை பெரும்பாலான நாட்களில் குறைந்து வரும் வேளையிலும், போர் முடியாத காரணத்தாலும் மக்கள் மத்தியில் தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. அதாவது தங்கம் இப்போதையை விலையில் வாங்கலாமா..? வேண்டாமா..? என்பது தான். இதற்கான பதிலை சந்தை நிபுணர்கள் பொட்டில் ஆடித்தார் போல் கூறியுள்ளனர்.
தங்கம் விலை கடந்த ஜனவரி மாத உச்சத்திலிருந்து சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக உலக அளவில் போர் பதற்றம், பொருளாதார சிக்கல்கள் போன்ற காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும். மக்கள் அதிகம் வாங்குவார்கள். ஆனால் இம்முறை உலகம் முழுவதும் பதற்றம் நிலவினாலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த அசாதாரண நிலை முதலீட்டாளர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணம்
தற்போதைய வர்த்தக சந்தையில் பல்வேறு காரணங்கள் ஒரே நேரத்தில் தங்கத்தை பாதித்துள்ளன. அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது. இதனால் உலக அளவில் தங்கம் வாங்க விரும்புவோருக்கு விலை அதிகமாகத் தோன்றுகிறது. அதே நேரத்தில் அரசு பத்திரங்களின் வருமானம் உயர்ந்துள்ளது. தங்கம் போன்ற வருமானம் தராத சொத்துகளை விட, பத்திரங்களில் முதலீடு செய்வது சிறப்பாகத் தெரிகிறது. இதனால் முதலீட்டு சந்தையும் தங்கத்திற்கு சாதகமாக இல்லை.
மேலும், தங்கம் சார்ந்த மியூச்சுவல் பண்ட் (கோல்ட் ஈடிஎஃப்) இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர். பங்குச் சந்தை உள்ளிட்ட பிற சொத்துகளிலும் பரவலான விற்பனை நடைபெறுகிறது இதனால் ரூபாய் மதிப்பு சரிகிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம், எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் ஆகியவை சந்தையை பாதித்த காரணத்தால், தங்கத்துக்கு இது சாதகமாக இல்லை. இப்படி பல காரணிகள் சேர்ந்து தங்கம் விலையை கீழே இழுத்துள்ளன.
நிபுணர்களின் கருத்து
சந்தை நிபுணர்கள் இந்த வீழ்ச்சி நீண்டகாலமாகத் தொடராது என்று நம்புகின்றனர். டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் கூறுகையில், அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை சிறிய வரம்புக்குள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். சுமார் 5 சதவீதம் அளவுக்கு மேலும் கீழும் ஏற்ற இறக்கம் இருக்கலாம். இதேவேளையில் விரைவில் பெரிய அளவிலான உயர்வு எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் இது தற்காலிக நிலை மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பு உள்ளது
தங்கம் விலையில் தற்போது சரிவு இருந்தாலும், தங்கத்தின் எதிர்காலம் இன்னும் பலமானதாகவே உள்ளது. உலக அளவிலான நாடுகளின் கடன் அளவு மிக அதிகமாக உள்ளது. பணவீக்கம் இன்னும் கவலைக்குரிய அளவில் நீடிக்கிறது. காகிதப் பணத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.
இதோடு அதிகரித்து வகும் உலகளாவிய அரசியல் பதற்றங்களால் தங்கத்துக்கு தேவையை அதிகரிக்கும். இதேவேளையில் ரஷ்யா, சீனா போன்றவை தங்கத்தின் ஏற்றுமதியை குறைத்து வருகிறது, இதனால் சப்ளை அளவிலும் பாதிப்பு இருக்கும். இந்தக் காரணிகள் அனைத்தும் நீண்டகாலத்தில் தங்கத்தை வலுவான முதலீட்டு சொத்தாக வைத்திருக்கும்.
முக்கிய நிலைகள்
இந்த நிலையில் முதலீட்டு நிபுணர்கள் தங்கத்துக்கு சில முக்கிய விலை எல்லைகளை பரிந்துரை செய்துள்ளனர். தங்கம் 4800-4850 டாலர் என்ற எதிர்ப்பு நிலையைத் தாண்டி நிலைத்து நின்றால், அடுத்த கட்டமாக 5000 டாலர் வரை உயர வாய்ப்பு உள்ளது. மறுபுறம் 4600 டாலர் என்ற ஆதரவு நிலை உடைந்தால் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம்.
வெள்ளியைப் பொறுத்தவரை 77 டாலர் எதிர்ப்பு நிலையைத் தாண்டினால் 82 டாலர் மற்றும் 87 டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை நிலைகள் அடுத்த பெரிய நகர்வை தீர்மானிக்கும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த சரிவைப் பார்த்து பீதியடைந்து விற்க வேண்டாம். ஒரே நேரத்தில் அதிக அளவில் வாங்குவதைத் தவிர்க்கவும். விலை குறையும் போது சிறு சிறு தொகையாக (படிப்படியாக) முதலீடு செய்வது நல்லது. இந்த முறை ஆபத்தை குறைத்து, நீண்டகால லாபத்தை அதிகரிக்க உதவும்.
தங்கம் விலை நிரந்தரமாக வீழ்ச்சியடையவில்லை. பொருளாதாரக் காரணிகளால் ஏற்பட்ட தற்காலிக சரிவு மட்டுமே இது. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு தங்கம் இன்னும் பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க சொத்தாகவே உள்ளது. ஆனால் இப்போது பொறுமை மற்றும் கவனமான முதலீடு மிகவும் அவசியம். சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து, சரியான நேரத்தில் முடிவெடுப்பது தான் சிறந்த வழி.
-
ரூ.2 லட்சத்தை தாண்டும் தங்கம்.. நிலைமை கைமீறும்? 'கோல்ட் குரு' சாந்தகுமார் உடைக்கும் ரகசியங்கள்! -
Gold Rate: மளமளவென சரியும் தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
தங்கம் விலையில் இன்று பூகம்பம்.. அமெரிக்கா பகீர்.. ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால்.. எல்லாம் மாறுது -
ஈரான் போர்: தங்கம் விலைக்கு அடுத்தடுத்து செக்.. நாளை சந்தை எப்படி இருக்கும்? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications