Gold Price Hike:இந்த வருஷம் முடியும்போது தங்கம் விலை எவ்ளோ எகிறியிருக்கும் தெரியுமா?ICICI ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், நகைப் பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் வந்துள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 9,000 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ.9,600 வரை உயரக்கூடும் என்றும் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரசியலில் நிலவும் பதற்றமான சூழல்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து, உச்சத்தை எட்டி வருகிறது. பல நாடுகளில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது, வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பது ஆகியவற்றின் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது.

Gold Prices May Surge to 90 000 per 10g by Mid-2025 ICICI Bank Report

எகிறும் தங்கம் விலை

கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆபரண தங்கம் ஒரு சவரன் 47 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், ஆண்டு முடிவில் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட 57 ஆயிரத்தை தொட்டிருந்தது. இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு அன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை.

தற்போது 1 கிராம் 22 கேரட் தங்க விலை 8,360 ரூபாயாகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூபாய் 66,880 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் 67 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 3 மாதங்களில் சவரனுக்கு சுமார் 10 ஆயிரம் என்ற அளவுக்கு தங்கம் விலை எகிறியுள்ளது. தற்போது 24 கேரட் தங்கம் விலை 9,120 ரூபாயாக விற்பனை ஆகிறது.

ஏப்ரல் 2ல் டிரம்ப் செயல்படுத்தும் முடிவு

அமெரிக்கா மீது அதிகம் வரி விதிக்கும் நாடுகள் மீது அதே அளவு பதில் வரியை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை மேலும் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதத்திற்குள் தங்கம் விலை

இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் குளோபல் மார்க்கெட்ஸ் ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்க வரி நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக 2025 காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி - ஜூன்) தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.87,000- ரூ.90,000 ஆக உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் 4 சதவீதம் உயர்ந்தது. இது உலகளாவிய சந்தைப் போக்கையும், அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பில் 2 சதவீதம் உயர்ந்ததையும் பிரதிபலித்தது. இந்நிலையில், இதே நிலை தொடர்ந்தால், தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (அதாவது ஜூன் மாதம் வரை) 10 கிராம் ரூ.87,000 முதல் ரூ.90,000 வரை விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முடிவில்

தற்போதைய சூழலே தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.94,000 முதல் ரூ.96,000 வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கிராம் தங்கம் விலை 9,600 ரூபாய் வரை உயரும் என்று ஐசிஐசிஐ வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+