தங்கம் விலை ஒரே நாளில் ரூ.464 சரிவு.. இப்போது என்ன விலை தெரியுமா? நகை வாங்க குவியும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் 36 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க விரும்பிய மக்கள் மீண்டும் நகைக்கடைகளில் குவிந்து வருகிறார்கள்.
தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.
Recommended Video

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை சரசரவென குறைந்தது.

35 ஆயிரத்தில் விற்பனை
தங்கம் விலை இதுவரை இல்லாதவிற்கு மிகப்பெரிய அளவில் குறைந்து கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒரு சவரன் ரூ.35640க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலை 4469 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை அதிரடியாக உயர தொடங்கியது.

என்ன விலை
பிப்ரவரி 6ம் தேதி சனிக்கிழமை அன்று ஒரு சவரன் தங்கம் விலை 35752 ரூபாய்க்கு விற்பனையானது. அன்று ஒரு கிராம் தங்கம் 4469க்கு விற்பனையானது. ஞாயிறு அன்று தங்க மார்க்கெட்டிற்கு விடுமுறை என்பதால் விலை நிர்ணயம் செய்யப்படாது. இதன் காரணமாக சனிக்கிழமை விலையான 35752 ரூபாய்க்கே ஒரு சவரன் தங்கம் விற்பனையானது.

அதிரடியாக உயர்வு
பிப்ரவரி 8ம்தேதி திங்கள்கிழமை அன்று ஒரு சவரன் தங்கம் விலை 35720 ரூபாய்க்கு விற்பனையானது. அன்று ஒரு கிராம் தங்கம் 4465க்கு விற்பனையானது. அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 9ம் தேதி செவ்வாய் கிழமை அன்று தங்கம் விலை ஒரு சவரன் அதிரடியாக உயர்ந்து 36296 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 4537 ரூபாய்க்கு விற்றது.

இன்று தங்கம் விலை
பிப்ரவரி 10ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 36176 ரூபாயாகவும், பிப்ரவரி 11ம் தேதியான நேற்று ஒரு சவரன் 36192 ரூபாய் ஆகவும் குறைந்தது. இந்நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,483 ஆக விற்பனையானது. மாலையில் மேலும் குறைந்து ரூ.35,728 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.464 சரிவை கண்டுள்ளது தங்கம்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications