தீபாவளிக்கு வந்த ஹாப்பி நியூஸ்.. திடீரென சரிந்த தங்கம் விலை! சட்டுபுட்டுனு நகைக் கடைக்கு கிளம்புங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்..

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

gold rate gold silver


கடந்த ஜூலை மாதத்தில் மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் சுங்கவரி குறைக்கப்பட்டது. அப்போது லேசாக தங்கத்தின் விலை சரிந்த நிலையில், அதற்குப் பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் சுப நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தங்கம் வாங்குவது, பாதுகாப்பான முதலீட்டுக்கு தங்கத்தை தேர்ந்தெடுப்பது என வர்த்தகம் தங்கத்தை நோக்கிய இருந்ததால் தங்கத்தின் விலை விண்ணை தொட்டு வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சி மற்றும் முதலீடு, சேமிப்புக்காக தங்கம் வாங்கும் நகை பிரியர்களும் இல்லத்தரசிகளும் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கம் போல கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த வாரம் வரை தங்கத்தின் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் காரணமாக பதற்றத்தில் எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது, அமெரிக்க அதிபர் தேர்தல், தங்க பத்திரத்தில் முதலீடு, பண்டிகைக் கால விற்பனை உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் வரும் காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்பட்டது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போதே தங்கத்தை வாங்குவது நல்லது.. இல்லையேல் வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விற்பனை விலை அதிரடியாக குறைந்துள்ளது. அக்டோபர் 27ஆம் தேதியான நேற்று ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.58,880க்கும், ஒரு கிராம் ரூ.7,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் 28ஆம் தேதி இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.350 குறைந்து ரூ.48,200க்கும், கிராம் ரூ.6,025க்கும் விற்பனை ஆகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000க்கும் விற்பனை விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+