Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க மார்க்கெட்டில் பெரிய பூகம்பம்.. அமெரிக்காவில் இரவோடு இரவாக நடந்த பரபரப்பு.. அடியோடு மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்தது தொடர்பாக நேற்று புதிய தரவுகள் வெளியானதை அடுத்து, அங்கே இரவோடு இரவாக தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்த அறிக்கை அமெரிக்க டாலரின் மதிப்பையும் குறைத்தது.

பொதுவாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைந்தால், வேலையின்மை குறைந்தால் உடனே பணத்தின் மதிப்பு குறையும். டாலர் புழக்கம் குறையும் என்பதால் இதன் விளைவாக டாலர் மதிப்பு குறையும். இதன் விளைவாக தங்கத்தின் விலை அதிகரிக்கும். பொதுவாக டாலர் மதிப்பு குறைந்தால்... மக்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி செல்வார்கள். அப்படி செல்லும் பட்சத்தில், டாலர் மதிப்பு குறையும்.

gold rate silver investment

பொதுவாக டாலர் மதிப்பு குறையும் போது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அப்படிதான் டாலர் மதிப்பு சரிவால் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து உள்ளது.

சர்வதேச சந்தை - தங்கம் விலை

சர்வதேச சந்தையில், உடனடித் தங்கம் 0.2% உயர்ந்து அவுன்ஸுக்கு $4,310.21 ஆகவும், அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் அவுன்ஸுக்கு $4,332.3 ஆக சற்று குறைந்தும் முடிவடைந்தன. அமெரிக்க டாலர் குறியீடு இரு மாதக் குறைந்த அளவை எட்டியதால், டாலர் அல்லாத வாங்குபவர்களுக்குத் தங்கம் மலிவாகியது. மேலும், அமெரிக்க அரசுப் பத்திர ஈவுத்தொகை குறைந்ததும் தங்கத்திற்குச் சாதகமாய் அமைந்தது.

இந்தியாவில் தங்கம் விலையானது தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில் நேற்று சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

வேலையின்மை விகிதம் 4.4%

அமெரிக்க சந்தை வல்லுநர்கள் கூற்றுப்படி, நவம்பரில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மேம்பட்ட போதிலும், வேலையின்மை விகிதம் 4.4% என்ற எதிர்பார்ப்பை விஞ்சி 4.6% ஆக உயர்ந்தது. இது மத்திய வங்கிக்கு வட்டி விகிதங்களைக் குறைக்கக் காரணமாய் உள்ளதாகத் தெரிவித்தனர்

அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் சிறிய வட்டி விகிதக் குறைப்பை ஏற்கனவே அறிவித்திருந்தது. குறையும். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் 25 அடிப்படைப் புள்ளிகள் (basis points) வட்டி குறைப்பை கடந்த வாரம் அறிவித்தது. இதனால் டாலர் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. வட்டி மதிப்பு குறைந்தால் டாலர் மதிப்பு குறையும். டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும்.

அதன்படியே அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்வதேச சந்தையில் டாலர் விலை குறைந்த உடனே தங்கம் விலை உயர்ந்து உள்ளது. சர்வதேச பொருளாதார வல்லுனர்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தி உள்ளது.

தங்கம் விலை என்ன ஆகும்?

ANZ வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $4,400 ஆக உயரும் என்று கணித்துள்ளது. மேலும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டக்கூடும் என்றும், பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கொள்கைகளை தளர்த்தும் சுழற்சியை முடிக்கும்போது இரண்டாம் பாதியில் சரிவு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.

ANZ மேலும், "பெடரல் வங்கியின் சுதந்திரம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் குறித்த கவலைகள் தங்கத்தில் முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்" என்று தெரிவித்தது.

இந்த வங்கி, வெள்ளி விலையும் 2026-ம் ஆண்டு மத்தியப் பகுதிக்குள் ஒரு அவுன்ஸ்க்கு $57.50-ஐ எட்டும் என்று கணித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் கடுமையான நிலைப்பாடு மற்றும் எதிர்பார்ப்பை விட வலுவான அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆகியவை தங்கத்தின் விலையை குறைக்கும் அபாயங்களை உருவாக்கலாம் என்று ANZ எச்சரித்துள்ளது.

டாலர் மதிப்பில் தங்கம் வாங்குவது

ANZ வங்கி தனது கணிப்பில், இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,400 ஆக உயரும் என்றும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகித குறைப்பு சுழற்சியை முடித்த பிறகு, அடுத்த ஆண்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் ANZ குறிப்பிட்டது.அதாவது சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,983 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹11,901 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,831 ஆகவும் உள்ளது. இது 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹10000 ஆக குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன,

மத்திய வங்கியின் தங்க கொள்முதல், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக தடைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்.. ஆனால் அது நீடிக்காது. ஒரு course correction தேவைப்படும். அது கண்டிப்பாக அடுத்த வருடம் இரண்டாம் பாதியில் நடக்கும். இதனால் கண்டிப்பாக விலை குறையும் என்று ANZ வங்கி தெரிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+