தங்கம் விலை திடீர் சரிவு.. நகை வாங்க சரியான நேரமா? இன்று சென்னையில் தங்கத்தின் விலை என்ன?
சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 120 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 15 விலை குறைந்து ரூ.7080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. செப்டம்பரில் மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,095-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று (செப்டம்பர் 30) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் (ஒரு சவரன்) ஆபரணத் தங்கம் ரூபாய் 120 குறைந்து, ரூபாய் 56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,280 ஆகவும் கிராம் ரூ. 7,535 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை முறையாக கிராம் ரூபாய் 7 ஆயிரத்தை எட்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தங்கத்தின் தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணிய மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது நிம்மதியைக் கொடுத்துள்ளது. அதேசமயம், தங்கம் விலை தொடர்ந்து குறையுமா அல்லது மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்குமா என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, விலை மாற்றமின்றி கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications