தங்கம் விலை.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே! குறைந்து, இப்ப மீண்டும் உச்சம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிர்ச்சியூட்டும் விதமாக சவரனுக்கு ரூ 760 உயர்ந்துள்ளது. நேற்று ரூ 200 உயர்ந்ததை அடுத்து இன்றும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம், வெள்ளியின் விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 760 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 52,520 க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 95 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,565 க்கு விற்பனையாகிறது.

அது போல் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 87500-க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களாக சவரனுக்கு ரூ 1880 உயர்ந்துள்ளது. ஏற்கெனவே தங்கம் விலை சவரனுக்கு ரூ 52 ஆயிரம் விற்பனையானது. இந்த நிலையில் பட்ஜெட்டில் சுங்க வரியை குறைத்ததால் இனி தங்கம் விலை ரூ 50 ஆயிரத்திற்கு கீழ் சரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 500, 200, 700, 160 என குறைவதும் உயர்வதுமாக இருந்து கடைசியில் சவரன் ரூ 52 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனால் அன்றே தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 2,200 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு சரிந்து கொண்டே வந்த தங்கம் திடீரென 160 ரூபாய் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த நாளே ரூ 160 குறைந்தது. இப்படியாக சீசா விளையாடிக் கொண்டிருந்த தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை முழம் ஏறுவது, ஜான் சறுக்குவதுமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து கிராம் ரூ 6470க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் 51,760 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கிராமுக்கு ரூ 70 குறைந்து பவுனுக்கு ரூ 560 மேலும் சரிந்து ஒரு கிராம் ரூ 6,330 க்கும் ஒரு சவரன் ரூ 50,640-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 87 க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ 6350 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு பவுன் ரூ 50,800க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 86.50 க்கும் ஒரு கிலோ ரூ 86,500-க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,400 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 75 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,425 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,560 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,445 க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,760-க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,465 க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ 87.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 87500-க்கும் விற்பனையானது.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications