Gold Rate Today: 4 நாள் கழித்து பெருமூச்சு விடும் நகைப் பிரியர்கள்! சென்னையில் தங்கம் விலை என்ன?
சென்னை: சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜனவரி 12ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 58,520-க்கு (நேற்று விற்பனையான விலைக்கே) விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஜனவரி 12 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை பழைய விலைக்கே விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ 58,520-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ 7315-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்திருந்தது.
அதன் பின்னரும் 22 கேரட் தங்கம் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்தது. அந்த வகையில் கடைசியாக கடந்த சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ 360 குறைந்து ஒரு சவரன் ரூ 57,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பின்னர் வாரத்தின் முதல் நாளாக நேற்று தங்கம் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறாமல் அதே விலையிலேயே நீடித்தது.
அது போல் திங்கள்கிழமையும் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ள நிலையில் இன்று ரூ 240 உயர்ந்ததால் தங்கம் விலை சவரனுக்கு ரூ 800 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 11 நாட்களாக 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:
12.01.2025- ஒரு சவரன் ரூ.58,520
11.01.2025- ஒரு சவரன் ரூ.58,520
10.01.2025- ஒரு சவரன் ரூ.58,280
09.01.2025- ஒரு சவரன் ரூ.58,080
08.01.2025- ஒரு சவரன் ரூ.57,800
07.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
06.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
05.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
04.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
03.01.2025- ஒரு சவரன் ரூ 58,080
02.01.2025- ஒரு சவரன் ரூ 57,400
01.01.2025- ஒரு சவரன் ரூ 57,200
டிசம்பர் மாதம் தங்கம் விலை: டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு கிராம் ரூ 7150 க்கு விற்பனையானது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஒரு கிராம் ரூ 7,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திலேயே தங்கம் விலை அதிகரித்தது என்றால் அது டிசம்பர் 11 ஆம் தேதிதான், அன்றுதான் ஒரு கிராம் ரூ 7,285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் தங்கம் விலை டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ 7,040 என குறைந்தது.












Click it and Unblock the Notifications