Gold Rate: ஒரே நாளில் இரு முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! 90,000த்தை நெருங்கிய சவரன் விலை
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 6) சவரனுக்கு ரூ 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ 88,480-க்கு விற்பனையான நிலையில் மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 உயர்ந்து சவரன் ரூ 89,000 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1400 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.
அக்டோபர் 6 ஆம் தேதியான இன்று காலை கிராமுக்கு ரூ 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,060-க்கும், சவரனுக்கு ரூ 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ 88,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 166-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ 89 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,125 கிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1400 உயர்ந்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில தினங்களாக ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வதும் ஒரு முறை உயர்வது, ஒரு முறை குறைவது என நிகழ்ந்து வருகிறது. எனவே தீபாவளிக்கு சவரன் 90 முதல் 95 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
06.10.2025- ஒரு சவரன் ரூ 89,000 (மாலை)
06.10.2025- ஒரு சவரன் ரூ 88,480 (காலை)
05.10.2025- ஒரு சவரன் ரூ 87,600
04.10.2025- ஒரு சவரன் ரூ 87,600
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025- ஒரு சவரன் ரூ. 86,880












Click it and Unblock the Notifications