தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிவு.. சவரனுக்கு 408 ரூபாய் குறைந்தது
Recommended Video

சென்னை : 13 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தங்கம் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக காணப்படுகிறது. திருமணத்தை சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுதாக கூறிக்கொண்டாலும் இன்னும் தங்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தை சேர்ப்பது தான் ஒவ்வொரு குடும்பத்தின் பிரதானமான நோக்கமாக இருக்கிறது.

ஆனால் அண்மைக் காலமாக தங்கம் வாங்குவோருக்கு அதன் விலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனெனில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த 8 மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4 ஆயிரத்து 656 ரூபாய் உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரூ.26,480 ஆக இருந்த தங்கத்தின் விலை, அதன்பிறகு 2ம் தேதி ரூ.27,064 ஆகவும், 3ம் தேதி ரூ.27,328, ஆகவும் 5ம் தேதி ரூ.27,680 ஆகவம், 6ம் தேதி ரூ.27,784 ஆகவும் , 8ம் தேதி ரூ.28,464 என்றும், 9ம் தேதி 28,552 என்றும் உயர்ந்து கொண்டே சென்றது. இதேபோல் கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.28,656 ஆகவும் ஆகஸ்ட் 12 ரூ. 28,824க்கும் விற்பனையானது. உச்சகட்டாக நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 29 ஆயிரத்து 16 ரூபாய் ஆக உயர்ந்தது. இதனால் தங்கம் வாங்குவோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சற்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று தங்கம்விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.408 குறைந்து 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 576 ரூபாய் ஆக உள்ளது.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications