ஹேப்பியாகும் அளவுக்கு ஒரே நாளில் சரிந்த தங்கம் விலை.. சென்னையில் இன்று என்ன ரேட்?
சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக கடும் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 560 குறைந்து 56,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 70 குறைந்து, 7,030 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
இந்த மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்வைக் கண்டு வந்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 7,100 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 56,800 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது.
இன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,030 க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.56,240-க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.46,480க்கும், கிராம் ரூ.5,810க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதிரடியாக விலை குறைந்து உள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கதைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications