Today Gold Rate: மளமளவென சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 சரிவு.. சென்னையில் 1 கிராம் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 7070க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ520 குறைந்து 56,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் வெள்ளியின் விலையும் இன்று ஒரு ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை குறைந்தது. அதற்கு முன்பு இரண்டு நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை ஆகி வந்தது. நேற்று முன் தினம் 17 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 57,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கு விற்பனை ஆகி வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூபாய் 120 குறைந்தது. இதன்படி நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 57,080-க்கு விற்பனையானது. இதேபோன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையானது, ரூ 15 குறைந்து கிராம் ரூ 7,135 -க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் 7135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கமானது 7,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூபாய் 65 குறைந்துள்ளது. இதேபோன்று சவரனுக்கு இன்று ஒரே நாளில் 520 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ.56,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று வெள்ளியின் விலையானது ஒரு கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூபாய் ஒன்று குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் இது தான் குறைவு:
இந்த டிசம்பர் மாதத்தில் இவ்வளவு குறைந்து இருப்பது, இன்றைக்கு தான். முன்னதாக கடந்த கடந்த 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7090க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு இன்றைக்கு தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நடப்பு டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7285 வரை சென்றுள்ளது.
நவம்பர் மாதத்தில் எவ்வளவு இருந்தது?:
கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 7385 ரூபாய் வரை விற்பனை ஆனது. அதேபோல் கடந்த நவம்பர் மாதத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 7065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இது நகைப் பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்துள்ளது. ஆனாலும் விலை குறைவு என்பது தற்காலிகமானது எனவும் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக அத்துறை நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. எது எப்படியோ, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவது கொஞ்சம் ஆறுதல் கொடுப்பதாக அமைந்துள்ளது.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications