தங்கம் விலை ஒரேயடியாக சரிவு? டோனை மாற்றிய ஆனந்த் சீனிவாசன்! ஒரே வரியில் நறுக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை இப்போது சில நாட்களாகத் தான் நிலையாக இருக்கிறது. இதனால் தங்கத்தை இப்போது வாங்குவது சரியாக இருக்குமா.. இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்.. தங்கத்தை இப்போது யார் வாங்கலாம் என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் ஏற ஆரம்பித்த தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அமெரிக்கா அதிபராக இருக்கும் டிரம்ப் இஷ்டத்திற்குப் பிறப்பித்த உத்தரவுகளும் புவிசார் அரசியல் மாற்றங்களும் தான் இதற்குப் பிரதானக் காரணமாக இருந்தது. ஆனால், இப்போது கடந்த சில வாரங்களாக நிலைமை மாற ஆரம்பித்துள்ளது.

Anand Srinivasan gold personal finance

தங்கம் விலை

மத்திய கிழக்கு பதற்றம், அமெரிக்கா சீனா வர்த்தகப் போர் முடிவுக்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தடாலடியாகச் சரிய ஆரம்பித்தது. ஒரே வாரத்தில் கணிசமாகக் குறைந்திருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது சில நாட்களாகத் தங்கம் விலை நிலையாக இருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது தங்கத்தை இப்போதே வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் வந்துள்ளது.. காத்திருந்தால் இன்னும் குறையுமா இல்லை.. திடீரென அதிகரிக்க ஆரம்பித்துவிடுமா என்பதே பலருக்கும் இருக்கும் சந்தேகம். இதற்குப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை. அப்படியே நின்றுவிட்டது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித குறைப்பைச் செய்தாலும், அடுத்த முறை வட்டியைக் குறைப்போமா என உறுதியாகச் சொல்ல முடியாது எனக் கூறியதாலேயே தங்கம் அப்படியே நின்றுவிட்டது. வெள்ளி நீங்கள் வாங்கும் விலை ரூ.165ஆக இருந்தாலும் விற்கும்போது 140 ரூபாய் தான் கிடைக்கும். சில்வர் இன்னும் கொஞ்சம் நெகட்டிவாக தான் இருக்கும்.

தங்கத்தின் டிமாண்ட் 3% ஏறி இருப்பதாகச் சர்வதேச தங்க கவுன்சில் சொல்கிறது.. பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க போறாங்க. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென் கொரியா கூட தங்கத்தை வாங்க முடிவு செய்துள்ளது. இதனால் தங்கம் விலை பெரியளவில் குறையாது. விலை அப்படியே இருக்கும்.

என்ன நடக்கிறது

அடுத்த வருஷம் அமெரிக்காவில் பற்றாக்குறை அதிகரிக்கும்.. இதனால் அமெரிக்க மத்திய வங்கி வேறு வழியில்லாமல் வட்டி விகிதத்தைக் குறைக்கும்! அமெரிக்க பெடரல் வங்கிக்கும் அதிபருக்கும் சண்டை நடக்கும். அடுத்தாண்டு நடக்கும் மிட் டேர்ம் தேர்தலில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இழந்தால் மட்டுமே நிலைமை மாறும்.

யார் வாங்கலாம்!

ஆனால், அதற்குள் தங்கம் விலை 5000 டாலரை தண்டும் எனச் சர்வதேச வல்லுநர்கள் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நமது டார்கெட்டை நாம் அடைந்துவிட்டோம். எனவே, இப்போதைக்கு நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் சில்வரை முதலீடாகக் கருதுவது கடினம். தங்கம் உங்களுக்குத் தேவை என்றால் வாங்குங்கள்.. வீட்டில் எதாவது திருமணம் அல்லது பங்ஷன் இருந்தால் மட்டும் தங்கத்தை மொத்தமாக வாங்குங்கள்.. இல்லை என்றால் இப்போதைக்கு வேண்டாம்.. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அடுத்து 18, 16 கேரட் தங்கத்தை மக்கள் வாங்க ஆரம்பிப்பார்கள்..

கவனம்

வெள்ளிக்கும் கடன் கொடுக்கலாம் என ஆர்பிஐ சொல்லி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை நான் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. இருப்பினும், இந்தளவுக்கு விலை ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கும் ஒரு பொருளுக்கு எப்படிக் கடன் கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. எனவே, அதைக் கவனமாகவே பார்க்க வேண்டும்" என்றார்.

அதாவது தங்கம் விலை volatile- அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பதால் இப்போதைக்குத் திருமணம் உள்ளிட்ட பங்ஷன் இருந்தால் மட்டுமே வாங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார் ஆனந்த் சீனிவாசன்!

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+