Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் விலை ரூ.2 லட்சம் போகலாம்.. அடகு கடைக்கு போகும் தங்க நகைகள்.. வெள்ளி ரேட் சரியுமா: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தங்கம் விலை 2 லட்சம் போனாலும், 5 லட்சம் போனாலும் கவலைப்படாதீர்கள். அது ஒரு சர்வதேச வர்த்தக விளையாட்டு... நகையாக வாங்கி பணத்தை முடக்குவதை விட, வருமானம் தரும் பிற தொழில்களிலோ அல்லது முதலீடுகளிலோ கவனம் செலுத்துங்கள். அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருங்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

King 23x7 என்ற சேனலில் பேட்டி தந்துள்ள உமாபதி, "கடந்த 2000, 3000 வருடங்களாகவே தங்கம் மட்டுமே தனது மதிப்பை இழக்காத ஒன்றாக இருந்து வருகிறது... பல நாடுகள் தங்கள் பொருளாதார பாதுகாப்பிற்காக தங்கத்தை ஒரு நிலையான சொத்தாக கருதி வாங்கி சேமிக்கின்றன.

Gold Rate Gold Jewellery Pawn Shop

தங்கம் விலை

அமெரிக்காவின் பொருளாதார சூழல்கள், தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.. அதேபோல சீனாவின் மத்திய வங்கி, அமெரிக்கா போன்ற நாடுகள் சமீபகாலமாகவே தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகிறார்கள்..

தங்கம் இப்போது ஆபரணமாக மட்டுமன்றி, பங்குச்சந்தையில் ஒரு வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது. ஆன்லைன் டிரேடிங் மற்றும் பங்குச்சந்தையில் தங்கத்தின் மீதான வர்த்தகம் அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளது.. இந்த விலை ஏறுவதை தடுத்து நிறுத்த முடியாது, அதை ஒரு உலகளாவிய பொருளாதார மாற்றமாக பார்க்க வேண்டும்.

வெள்ளி ரேட்

தங்கக் கட்டிகளாக வாங்கி சேமிப்பதால் தங்கம் விலை 2 லட்சம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது.. இதனால் நகைக்கடை விற்பனையாளர்களுக்கு லாபம்தான்..

1920-களில் தங்கம் ஒரு கிராம் 1 ரூபாய்க்கும், ஒரு சவரன் 14 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.. ஆனால், தங்கத்தை நகையாக வாங்குவது முதலீட்டு ரீதியாக நஷ்டமே. கூலி, சேதாரம் என 25% வரை நாம் கூடுதலாகக் கொடுக்கிறோம். அந்த 25% லாபத்தை அடையவே பல ஆண்டுகள் ஆகும்.

தங்க நகைகள் ஆபரணங்கள்

தங்கம் விலை ஏறும்போது வெள்ளியின் விலையும் ஏறும்... காலம் காலமாக இவை இரண்டும் ஒன்றாகவே பயணித்து வருகின்றன.. ஆனால், வெள்ளி விலையில் மிகப்பெரிய சரிவு வர வாய்ப்புள்ளது.. தங்கம் விலை குறையும்போது சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும், ஆனால் வெள்ளி விலை திடீரென அதிரடியாக சரியும்.. 30 ரூபாய்க்கு கூட வரலாம்..

20 வருடங்களுக்கு முன்பு, வெள்ளி விலை 8 ரூபாயிலிருந்து 72 ரூபாய்க்கு ஏறியபோது பலர் முதலீடு செய்தனர். ஆனால், அது திடீரென 38 ரூபாய்க்கு சரிந்ததால் பலர் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். வெள்ளி விலையில் பெரும் திருத்தம் என்பதால், மக்கள் அவசரப்பட்டு வெள்ளியில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்..

புதிய நகைகளை வாங்குவதை விட, ஏற்கனவே வைத்திருப்பவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதே சிறந்தது தேவையில்லாமல் நகைகளை ஆடம்பரமாக அணிவதை தவிர்க்கலாம்..

அடகு கடைகளில் தங்க நகை

இன்றைய 2k கிட்ஸ்களுக்கு தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவதில்லை.. அவர்கள் நகைகளை ஒரு சொத்தாக பார்ப்பதில்லை.. ஜஸ்ட் ஸ்டைலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.. நகைகளையும் தொட மாட்டார்கள். கொலுசு கூடப்போட மாட்டார்கள். டேட்டூவில் அவர்களது கவனம் செல்கிறது.

தங்கம் அல்லது நகைகள் ஒருவருக்கு பெரிய அளவில் பிரயோஜனப்படுவதில்லை. ஆனால், நகைகளை அணிந்திருப்பதால் மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்கள் என்ற ஒரு மாயை உள்ளது.. ஆனால், பார்ப்பவர்கள் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் உங்களை சாதாரணமாகத்தான் பார்ப்பார்கள். இதுதான் மனித இயல்பு.

தங்கத்தின் மதிப்பு

கழுத்தில் இருக்கும் நகை ஒரு கட்டத்தில் அடகு கடைக்குத்தான் போகும். அதுவரை அதை அணிந்திருப்பதாலோ அல்லது அது வீட்டில் இருப்பதாலோ உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை... வீடு இருந்தால் அதில் வசிக்கலாம், அனுபவிக்கலாம். துணிமணிகள் அணிந்தால் அது அழகை தரும். ஆனால், வெறும் 10 ஏக்கர், 20 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சொல்வதில் பலனில்லை.

அந்த நிலத்தில் தென்னந்தோப்பு வைத்து, அதில் தேங்காய் பறித்து விற்றுப் பணம் பார்த்தால் மட்டும்தான் அது உண்மையான சொத்து. சும்மா இருக்கும் சொத்து உங்களுக்கு தேவையற்றது.

தங்கத்தின் விலை ஏறினால் என்ன, இறங்கினால் என்ன? ஒரு கிராம் வாங்கி வைத்தாலும் அது ஒரு சேமிப்புதான். பழைய விலையில் ஒரு சவரன் வாங்கிய காசுக்கு இன்று ஒரு கிராம் தான் கிடைக்கிறது என்றாலும், அது லாபம்தானே?. கழுத்து நிறைய போட்டால்தான் பிரச்சனை, ஒரு செயின் போட்டாலும் அதன் மதிப்பு ஒன்றுதான். எனவே பார்வையை பொறுத்ததுதான் தங்கம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+