இன்றே கடைசி! உடனே ஓடுங்க.. ரூ.7000 தாண்டி உச்சம் தொட போகுது தங்கம் விலை- ஆனந்த் சீனிவாசன் தந்த ஐடியா
சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும். இது எந்தளவுக்கு உயரும்.. ஏன் உயரும்.. இப்போது தங்கத்தை வாங்குவது சரியாக இருக்குமா என்பதெல்லாம் குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் தான் எப்போதும் மிடில் கிளாஸ் மக்களின் மிக முக்கிய சேமிப்பாக இருக்கிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறுக சிறுக தங்கத்திலேயே தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.

நீண்ட கால நோக்கில் தங்கம் விலை எப்போதும் குறையாது என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இதற்கிடையே தங்கத்தை இப்போது வாங்கலாமா இல்லை கொஞ்ச நேரம் வெயிட் செய்யலாமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம்: தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,865க்கு விற்கப்பட்டது. அதேநேரம் 24 கேரட் தங்கம் ரூ.7489க்கு விற்கப்பட்டன. மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைத்த நிலையில், தங்கம் விலை பெருமளவு குறைந்தது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை மெல்ல உயர்ந்து இப்போது கிட்டதட்ட வரி குறைப்பிற்கு முந்தைய நிலையை எட்டிவிட்டது.
ரூ.700 தாண்டலாம்: இதற்கிடையே தங்கம் வாங்குவது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை இப்போது என்ற ரேஞ்சில் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை எவ்வளவு தூரம் குறைக்கப் போகிறது என்பது புதன்கிழமை (இன்றிரவு) தெரிந்துவிடும். 0.25% வட்டி குறைக்கப்பட்டால் தங்கம் விலை ஒரு கிராம் 6950 ரூபாய் வரை போகும். அதேநேரம் 0.5% வட்டி குறைக்கப்பட்டால் தங்கம் விலை நிச்சயம் ரூ. 7000ஐ தாண்டிவிடும்.
ஆனால், 0.5% வட்டி குறைக்கப்பட வாய்ப்பு மிகக் குறைவு. அதேநேரம் 0.25% வட்டி குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, தங்கம் விலை ரூ.7000ஐ விரைவில் நெருங்கும். தங்கம் விலை ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ரூ.7000ஐ நெருங்கி இருந்தது. அப்போது இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதன் காரணமாகவே தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது. ஆனால், இப்போது சில மாதங்களில் இறக்குமதி வரி குறைப்பிற்கு முன்பு இருந்த விலைக்குத் தங்கம் நெருங்கிவிட்டது.
ஐடியா தரும் ஆனந்த் சீனிவாசன்: அதாவது மத்திய அரசு வட்டியைக் குறைத்தது முதல் இப்போது வரை தங்கம் வாங்க மிக சிறந்த காலமாகவே இருந்தது. அந்த நேரத்தை மிஸ் செய்துவிட்டோம். இப்போது தங்கத்தை வாங்கலாமா என நீங்கள் கேட்டால்.. நிச்சயம் வாங்கலாம்.. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 100 கிராம் முதல் 200 கிராம் வரை தங்கம் இருக்க வேண்டும். நாளை ஏதோ அவசரம் என்றால் தங்கம் மட்டுமே உதவும். எனவே, அதை தவறாமல் வாங்குங்கள்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications