ஹார்ட் அட்டாக் கொடுக்கும் தங்கம் விலை! "சீக்கிரமே ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாயை தொடும்" கோல்ட் குரு ஷாக்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் சூழலில், அது குறைய வாய்ப்பே இல்லை என்று கோல்ட் குரு சாந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், சீக்கிரமே தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்ச ரூபாயை தொட்டுவிடும் எனச் சொல்லி ஹார்ட் அட்டாக் கொடுத்தார்.
தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து புதிய உச்சத்திற்குப் போய் வருகிறது. இப்போது விற்கும் விலையைப் பார்த்தால் மிடில் கிளாஸ் மக்களே கூட தங்கத்தை வாங்கும் முன்பு பல முறை யோசிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், தங்கம் விலை இப்போது குறையாது.. சொல்லப்போனால் இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி கோல்ட் குரு சாந்தகுமார் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கோல்ட் குரு சாந்தகுமார்
இது தொடர்பாக கோல்ட் குரு சாந்தகுமார் நமது ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தங்கம் விலை ரூ.8000ஆக இருந்த போது அமெரிக்க வல்லுநர் ஒருவர் தங்கம் விலை 38% வரை குறையும் என்றார். இதனால் அப்போது எல்லாரும் பதறினர். அப்போது சவரனுக்கு ரூ.1000, 2000 கூட குறைந்தது. ஆனால், அப்போதே தங்கம் விலை குறையாது என்பதைத் தெளிவாகச் சொன்னேன். 38% குறையும் எனச் சொல்ல இவர் என்ன கடவுளா.. தங்கம் விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது என்றேன். அதேதான் நடந்தது.
முன்பெல்லாம் போர்ப் பதற்றம் வந்தால், பங்குச்சந்தை சரிந்தால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால் தங்கம் விலை உயரும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தங்கம் விலை உயர்கிறது. இப்போது என்ன பிரச்சினை எனப் பார்த்தால் டிரம்ப் தான் பிரச்சினை. டிரம்ப் வந்ததால் தான் தங்கம் விலை பயங்கரமாக உயர்ந்துள்ளது.
காரணம் இதுதான்
அவர் வந்த பிறகு அமெரிக்க பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறேன். டாலர் மதிப்பை உயர்த்துகிறேன் என சொல்லிப் பல நாடகங்களை நடத்துகிறார். அதன் ஒரு பகுதியாகவே ஒவ்வொரு நாட்டின் மீதும் வரி விதிக்கிறார். இந்தியா மீதும் அப்படித் தான் 50% வரி விதித்தார். அமெரிக்காவின் கொள்கைகளாலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதில் இந்த வரி விதிப்பு பிரதானக் காரணமாக இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தது, ஹெச்-1பி விசா கட்டுப்பாடு எனப் பல விஷயங்களைச் சொல்லலாம்.
ஆனால், டிரம்ப் இத்தோடு நிறுத்த போவதில்லை. இப்படியே போனால் இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய் என்பதை எட்டிவிடும். அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.12,500க்கு போய்விடும்.
தங்கம் விலை குறையாது
எப்போதுமே தங்கம் விலை குறிப்பிட்ட அளவுக்கு உயர்ந்தது என்றால் அதே அளவுக்குக் குறைந்ததாகச் சரித்திரமே இல்லை. ரூ.5000 உயர்ந்தால் ரூ.1000 குறையும். இந்தாண்டு மட்டும் இதுவரை தங்கம் சவரனுக்குக் கிட்டத்தட்ட ரூ.27,600 உயர்ந்துள்ளது. அந்தளவுக்குக் குறையுமா என்றால் நிச்சயம் குறைய வாய்ப்பே இல்லை என்றே சொல்ல வேண்டும். அதிகபட்சம் ரூ.5000 தான் குறையும். ஏனென்றால் அடுத்தடுத்து பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது.
உலகில் தங்கத்திற்கு இணையாக இப்போது வேறு உலோகமும் இல்லை. அதுபோல ஒரு மாற்று உலோகம் வந்தால் மட்டுமே தங்கம் மவுசு குறையும். ஆனால், இதுவரை அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குப் பல காலமாக முயன்றாலும் வெல்ல முடியவில்லை. அப்படி வந்தால் மட்டுமே மவுசு குறையும். எனவே, இப்போதைக்குத் தங்கம் விலை குறையாது. இதனால் மக்கள் தான் தங்கள் சேமிப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்படி வாங்கலாம்
நகைச்சீட்டு போடலாம், அல்லது மாதாமாதம் அரை கிராம் ஒரு கிராமாகத் தங்கத்தை வாங்கலாம். சீட்டுப் போட்டுத் தங்கத்தை வாங்கினால் உங்களுக்குச் செய்கூலி சேதாரம் இருக்காது. இந்த நகைச்சீட்டு தான் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த ஒன்றாக இருக்கிறது. கடந்த 2, 3 ஆண்டுகளாக நகைச்சீட்டு போட்டவர்களுக்கு எடுக்கும்போதே 25 முதல் 30% வரை லாபம் கிடைத்துள்ளது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
SGB தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா நீங்க? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு.. இதோ முழு விபரம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications