சர்னு குறைந்த தங்கம் விலை.. ஏறின ஸ்பீடிலேயே இறங்கிய ஆச்சரியம்.. சென்னை உட்பட தமிழகம் முழுவதுமே.. செம
சென்னை: சென்னையில் இன்று விற்கப்படும் தங்கத்தின் விலை ஆச்சரியத்தை கிளப்பி விட்டுள்ளது.. தமிழகத்தில் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா?
நம்முடைய நாட்டிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில், தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது என்கிறார்கள்.. இதற்கு காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் உள்ளதுதான்.

மேலும், தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கேற்றபடி தங்கத்தின் மதிப்பும், விலையும் குறையாமலேயே இருந்து வருகிறது.
பொருளாதார நிலவரம்: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை பெரும்பாலான நேரங்களில் உயர்ந்தும், சில சமயங்களில் மட்டும் குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, கடந்த மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.. அதற்கு பிறகு பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது...
வழக்கமாக, சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையிலும் சர்வதேச தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே அதாவது 2024ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே விலையில் ஏற்றம், இறக்கம் தென்பட்டு வந்த நிலையில், இன்று ஜனவரி 17ம் தேதி விலை குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் விலை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கும் ஒரு கிலோ ரூ.77,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. மதுரையில் 22 காரட், கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர், திருச்சி: திருச்சியில் 22 காரட் கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. வேலூரில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
-
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா?












Click it and Unblock the Notifications