மீண்டும் எகிறிய தங்கம்! 4 நாட்களுக்கு பிறகு நடந்த மாற்றம்! இன்று ஆபரண தங்கம், வெள்ளி விலை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கம் இன்றி இருந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து இன்று ரூ.53,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20 உயர்ந்து இன்று ரூ.6,715க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

gold rate gold

ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்து வந்தது. அடுத்த ஒரே வாரத்தில் விலை சரிவு நின்று, அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,695 என்று விற்பனையானது. ஒரு சவரன் ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை நாள் என்பதாலும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாள் என்பதாலும் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமையான நேற்றும் தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்று நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஏற்றத்தைச் சந்திக்குமா? சரிவைச் சந்திக்குமா என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து இன்று ரூ.53,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20 உயர்ந்து இன்று ரூ.6,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.57,360 ஆகவும் கிராம் ரூ. 7,170 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.93,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 500 உயர்ந்த நிலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+