மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியது .. சென்னையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன், 29 ஆயிரத்து 088 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் கடந்த இரண் டு நாளில் 640 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஜனவரியில் 23 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. இந்நிலையில பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்கா -சீனா இடையிலான வர்த்தக போர், வளைகுடா நாடுகளில் நிலவிய பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை படிப்படியாக அதிகரித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 26 ஆயிரம் என்று இருந்த நிலையில் , திடீரென அந்த மாத இறுதியில் 30 ஆயிரம் ரூபாயை தொட்டது. இதனால் திருமணத்திற்கு நகை சேர்க்க விரும்பியோர், திருமணத்திற்கு நகை வாங்க விரும்பியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

29 ஆயிரத்தை தாண்டியது

29 ஆயிரத்தை தாண்டியது

இந்நிலையில் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது 28 ஆயிரத்து 400 என்ற அளவிலேயே இரண்டு தினத்திற்கு முன்பு வரை வந்தது. இந்நிலையில் மீண்டும் தங்கம் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை மேலும் 240 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

30 ரூபாய் அதிகரிப்பு

30 ரூபாய் அதிகரிப்பு

ஒரு கிராம் தங்கம் நேற்று முன்தினம் (அக்.1) , ரூ. 3556க்கும் , நேற்று (அக்.20) ரூ. 3606க்கும் விற்பனை ஆனது. இன்று ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து ரூ.3636க்கு விற்பனை செய்யப்படுகிறது.

200 ரூபாய் உயர்வு

200 ரூபாய் உயர்வு

வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 40 காசுகளுக்கு சென்னையில் விற்பனை ஆகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

அமெரிக்காவிலோ அல்லது சர்வதேச அளவிலோ பாதிப்புகள் ஏற்பட்டால் பங்குசந்தைகளில் முதலீடு செய்யும் பலரும் திடீரென பாதுகாப்புக்காக தங்கத்தின் முதலீடு செய்வது வாடிக்கையாகும். அதன் காரணமாகவே தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது. தங்கம் விலை அதிகரிப்பால் இந்தியாவில் தங்க விற்பனை கடுமையாக சரிந்துள்ளது/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+