Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் 600 உயர்வு! முதல்முறையாக 60000ஐ கடந்தது
சென்னை: இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்துள்ளது. தங்கம் விலை முதல் முறையாக 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று ரூ.7,525க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 60,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் இன்று ஒரு கிராம் 7,525க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் உச்சம் தொட்டு வருகிறது தங்கம் விலை.
இந்த 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை. இந்நிலையில், முதல் முறையாக தங்கம் விலை ஒரு சவரன் 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று தங்கம் விலை முந்தைய நாளின் விலையிலேயே மாற்றமின்றி விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வைக் கண்டுள்ளது.
அதேசமயம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. நேற்று போலவே இன்றும் வெள்ளி விலை எந்த மாற்றமுமில்லாமல், ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம் (கடந்த 10 நாட்களில் தங்கம் விலை)
ஜனவரி 12 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520
ஜனவரி 13- ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 14 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,640
ஜனவரி 15 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 16 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,120
ஜனவரி 17 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 18 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,480
ஜனவரி 19 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,480
ஜனவரி 20 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 21 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 22 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,200












Click it and Unblock the Notifications