Gold Rate Today: மீண்டும் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.. சென்னையில் 58,000ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம்
சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,260க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றமடைகிறது. தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் உயர்ந்து வருகிறது தங்கம்.
ஒரே ஆண்டில் ரூ. 10 ஆயிரம் அதிகரிப்பு
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,910க்கும், ஒரு சவரன் ரூ.47,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரே ஆண்டில் தங்கம் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராம் 7,150 ஆகவும், சவரன் 57,200 ரூபாய் ஆகவும் இருந்தது. அதாவது சரியாக 365 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 1,240 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்று சவரனுக்கு ரூபாய் 280 உயர்வு
நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,225 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 57,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,260 க்கும், ஒரு சவரன் 57,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்களாக தங்கம் விலை மாற்றமின்றி இருந்து வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய், சவரனுக்கு 80 ரூபாய் விலை அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை கிராமுக்கு 35 ரூபாய், சவரனுக்கு 280 ரூபாய் விலை அதிகரித்து உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூபாய் 100க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் 1 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி உள்ளது.
தங்கம் விலை நிலவரம் (கடந்த 8 நாட்களில் தங்கம் விலை!)
ஜனவரி 1 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,200
ஜனவரி 2 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,440
ஜனவரி 3 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,080
ஜனவரி 4 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720
ஜனவரி 5 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720
ஜனவரி 6 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720
ஜனவரி 7 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720
ஜனவரி 8 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,800
ஜனவரி 9 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,080












Click it and Unblock the Notifications