Gold Rate Today: தங்கம் விலை சரிவு.. பொங்கல் நாளான இன்று நகைப்பிரியர்களுக்கு குஷி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,330க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.58,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று காத்திருந்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று விலை குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

gold rate gold price

இந்திய மக்களிடையே தங்கம் மீதான ஆர்வம் அதிகம். தங்கம் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றமடைகிறது. தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் உயர்ந்து வருகிறது தங்கம். இந்நிலையில் பொங்கல் நாளான இன்று விலை குறைந்துள்ளது தங்கம்.

ஒரே வருடத்தில் ரூ. 10 ஆயிரம் அதிகரிப்பு

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,910க்கும், ஒரு சவரன் ரூ.47,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரே ஆண்டில் தங்கம் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராம் 7,150 ஆகவும், சவரன் 57,200 ரூபாய் ஆகவும் இருந்தது. அதாவது சரியாக 365 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 1,240 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்று சவரனுக்கு ரூபாய் 80 குறைவு

வாரத்தின் முதல் நாளான நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது உயர்ந்தது. ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 7,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58,720 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 7,330 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி & 24 காரட் தங்கம் விலை

வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூபாய் 101க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் 1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் சரிந்துள்ளது.

முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.7,996க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.63,968 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம் (கடந்த 8 நாட்களில் தங்கம் விலை)

ஜனவரி 6 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720

ஜனவரி 7 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720

ஜனவரி 8 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,800

ஜனவரி 9 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,080

ஜனவரி 10 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,280

ஜனவரி 11 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520

ஜனவரி 12 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520

ஜனவரி 13- ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720

ஜனவரி 14 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,640

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+