Gold Rate Today: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரன் 61 ஆயிரத்தை நெருங்கியது.. நகை பிரியர்கள் ஷாக்!
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் ஒரு சவரன் ரூபாய் 61 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.7,610 க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது தங்கம் விலை.
அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ள அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
61 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை. இந்நிலையில், முதல் முறையாக தங்கம் விலை நேற்று ஒரு சவரன் 61 ஆயிரத்தை எட்ட இருக்கிறது.
நேற்று (ஜனவரி 29) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,595க்கும் ஒரு சவரன் ரூ. 60,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதல் முறையாக அண்மையில் தான் தங்கம் விலை 60 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில், தங்கம் விலை சவரன் 61 ஆயிரத்தை நெருங்கி வருவது நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வெள்ளி விலை நேற்றை விட கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.106க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம் (கடந்த சில நாட்களில் தங்கம் விலை)
ஜனவரி 13- ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 14 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,640
ஜனவரி 15 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 16 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,120
ஜனவரி 17 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 18 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,480
ஜனவரி 19 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,480
ஜனவரி 20 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 21 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 22 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,200
ஜனவரி 23 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,200
ஜனவரி 24 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,440
ஜனவரி 25 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,440
ஜனவரி 26 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,440
ஜனவரி 27 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,320
ஜனவரி 28 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,080
ஜனவரி 29 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,760
ஜனவரி 30 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,880












Click it and Unblock the Notifications