Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: Gold Rate Today: தங்கம் விலையில் எதிர்பாராத சரிவு! நகை பிரியர்கள் குஷியோ குஷி.. அப்போ வெள்ளி விலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்தே வருகிறது. போரின் காரணமாகத் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாகத் தங்கம் விலை சரிந்தே வருகிறது. இருப்பினும், இன்றைய தினம் சர்வதேச மார்கெட் சூழல்களால் தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960க்கு விற்பனையாகிறது.

மத்திய கிழக்கு மோதல்கள் தொடரும் சூழலில் தங்கம் விலையில் விசித்திரமான நகர்வு ஏற்பட்டது. வழக்கமாக போர்க் காலங்களில் பாதுகாப்பான புகலிடமான தங்கம் உயரும். ஆனால், இந்த முறை அப்படி நடக்கவில்லை. போர் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ச்சியாகச் சரிந்தே வருகிறது.

Gold Rate Today

டாலர்

முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து, டாலரை நோக்கி பணத்தை நோக்கிச் சென்று வருகிறார்கள். மேலும், தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் தங்கம் விலை கடந்த வாரம் உயர்ந்த சூழலில், அந்த லாபத்தையும் புக் செய்து வருகிறார்கள். இதுவே தங்கம் விலை சரியப் பிரதான காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. டாலர் தான் எப்போதும் கரன்சி கிங் ஆகக் கருதப்படும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

போர் பதற்றம்

அதாவது ஈரானின் பதிலடித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் மத்திய கிழக்கு சென்ட்ரல் வங்கிகள் டாலர் பணப்புழக்கத்தை நாடியிருக்கலாம். சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் தான் நடக்கிறது. இந்த தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், டாலருக்கான தேவையை அதிகரித்தது. பொதுவாகவே டாலர் மதிப்பு உயரும் போது தங்கம் விலை சரியும். இப்போதும் அதுவே நடந்துள்ளது. அதேநேரம் இதே நிலை தான் தொடரும் எனச் சொல்ல முடியாது. இன்றே கூட தங்கம் விலை உயரலாம்.

"குண்டை போட்ட அமெரிக்கா! பறக்கும் தங்கம்.. ஒரு கிராம் ரூ.25,000.." இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்

தங்க மார்கெட்

நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூபாய் 265 குறைந்து ரூ.15,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2,120 குறைந்து 1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தைகளால் இன்றைய தினமும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.80 குறைந்து, ரூ.15,120க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ரூ.295க்கு விற்பனையாகிறது.

"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான்

4.03.2026 - ஒரு சவரன் 1,21,600 (நேற்று)

3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)

3.03.2026 - ஒரு சவரன் 1,25,200 (காலை)

2.03.2026 - ஒரு சவரன் 1,25,280

1.03.2026 - ஒரு சவரன் 1,26,200

28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (பிற்பகல்)

28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (காலை)

27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360

25.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,440

24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120

23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+