Gold Rate Today: ஒரே நாளில் சட்டென உயர்ந்த தங்கம் விலை.. இன்று சென்னையில் ரேட் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தொடங்கியது முதலே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் எப்போதுமே தங்கத்தைத் தான் முதல் சேமிப்பாகக் கருதுவார்கள். இதன் காரணமாகவே சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை வைத்து எப்போதும் தங்கத்தை வாங்குவார்கள்.

gold rate gold price

ஆனால், நமது நாட்டில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த 2025ம் ஆண்டிலாவது தங்கம் விலை குறையுமோ எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினமும் 22 கேரட் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.7260க்கு விற்பனையாகிறது. அதேபோல 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.87 உயர்ந்து ரூ.7920க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.696 உயர்ந்து ரூ.62,664க்கு விற்பனையாகிறது.

இந்த புத்தாண்டு பிறந்தது முதலே தங்கம் விலை உயர்ந்தே வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ரூ.150 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+