புதிய உச்சத்தில் தங்கம் விலை.. கிராமுக்கு ரூ.60 உயர்வு.. ஒரு சவரன் ரூ.82,320க்கு விற்பனை!
புதிய உச்சத்தில் தங்கம் விலை.. கிராமுக்கு ரூ.60 உயர்வு.. ஒரு சவரன் ரூ.82,320க்கு விற்பனை!
சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.82 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,320க்கும், ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து ரூ.10,290க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.145க்கு விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்த பின், இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயரத் தொடங்கியது.

குறிப்பாக தங்கம் விலையை பொறுத்தவரை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ரூ.75 ஆயிரத்து 760க்கு விற்பனையானது. ஆடி மாதத்தில் திருமண சீசன் இல்லையென்றாலும், தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்று மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதன்பின் ஆவணி மாதம் தொடங்கியதும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது.
முகூர்த்த நாட்களும் அடுத்தடுத்த வந்ததால், தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியுமா என்று சிந்திக்கும் அளவிற்கு சென்றது. பின்னர் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தங்கம் விலை எட்டியது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,230க்கு விற்பனையாகியது. இதனால் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,290க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.82,320க்கு விற்பனையாகி வருகிறது.
அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.145க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் ஒவ்வொரு நாளும் புதிய வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்று தயக்கம் காட்டி வருகின்றனர்.
செப்டம்பர் 1 முதல் தங்கத்தின் விலை
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640












Click it and Unblock the Notifications