Gold Rate Today: நேற்று சர்ரென எகிறிய தங்கம் விலை இன்று எவ்வளவு? நகை பிரியர்களுக்கு சற்றே ஆறுதல்!
Gold Rate Today (இன்றைய தங்கம் விலை நிலவரம்): தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று சென்னையில் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 60,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் உச்சம் தொட்டு வருகிறது தங்கம் விலை.
அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ள அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
முதல் முறையாக 60 ஆயிரம்
இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை. இந்நிலையில், முதல் முறையாக தங்கம் விலை நேற்று ஒரு சவரன் 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. நேற்று போலவே இன்றும் வெள்ளி விலை எந்த மாற்றமுமில்லாமல், ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம் (கடந்த 10 நாட்களில் தங்கம் விலை)
ஜனவரி 13- ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 14 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,640
ஜனவரி 15 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 16 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,120
ஜனவரி 17 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 18 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,480
ஜனவரி 19 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,480
ஜனவரி 20 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 21 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600
ஜனவரி 22 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,200
ஜனவரி 23 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 60,200












Click it and Unblock the Notifications