உச்சாணிக்கு சர்ரென ஏறிய தங்கம்... ஒரே நாளில் உயர்ந்த தங்கம் + வெள்ளி விலை..அப்படியே விக்கித்த சென்னை
சென்னை: ஒரே நாளில் தங்கம் விலை சர்னு மேலே உயர்ந்து சென்று, நகைப்பிரியர்களுக்கு கிலியை தந்து கொண்டிருக்கிறது.. இன்றைய தங்கம் நிலவரம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில், தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது என்கிறார்கள்.. இதற்கு காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருப்பதுதான்..

உயர்வு: அதற்கேற்றபடி தங்கத்தின் மதிப்பும், விலையும் குறையாமலேயே இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை பெரும்பாலான நேரங்களில் உயர்ந்தும், சில சமயங்களில் மட்டும் குறைந்தும் வருகிறது.
தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.. அதற்கு பிறகு பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது... அதேசமயம், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து காணப்பட்டது.. சென்னையிலும் அப்படித்தான், சர்வதேச தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

திடீர் குறைவு: நேற்று முன் தினம், திடீரென தங்கம் விலை லேசாக குறையவும், நகைப்பிரியர்கள் திக்குமுக்காடிப்போய்விட்டடனர்.. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.5,457 -க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.43,656-க்கு விற்பனையானது.. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,352-க்கும் விற்பனையானது..
ஆனால் இன்று ஒரே நாளில் ராக்கெட் விலைக்கு ஏறிவிட்டது.. இன்றைய விலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.38 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5595க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது, ரூ.43960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 76,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெருங்கவலை: அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் தாக்கம் தென்பட்டு வருகிறது.. இப்படி விலை உயர்ந்துபோவதால்தான், பலரும் தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பு கருதி, முதலீட்டில் கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டனர்.. அப்படியிருக்கும்போது, தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் ஆரூடம் சொல்வது, கவலையை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications