Gold Rate Today: தங்கம் விலை சரிவு! 2 நாளில் சவரனுக்கு ரூ 760 குறைவு! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.20) சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ 56,320-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ 760 குறைந்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 20-ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் ஒரு சவரன் ரூ 56,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 98-க்கு விற்பனையாகி வருகிறது.

சென்னையில் டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ 65 குறைந்து கிராம் ஒன்று ரூ 7070-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் குறைந்து ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 16ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச தங்கம் விலை: இந்த டிசம்பர் மாதத்தில் இவ்வளவு குறைந்து இருப்பது, நேற்றுதான். முன்னதாக கடந்த கடந்த 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7090க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு நேற்றைக்கு தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நடப்பு டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 11 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7285 வரை சென்றுள்ளது.
நவம்பர் மாதத்தில் எவ்வளவு இருந்தது?: கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 7385 ரூபாய் வரை விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 7065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் மாதம் தங்கம் விலையில் சரிவு: அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சென்னையில் தங்கம் ஒரு கிராம் 7,455 -க்கு விற்பனையானது. இது அதிகபட்சமாகும். அது போல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஒரு கிராம் 7.025 -க்கு விற்பனையானது. இது குறைந்தப்பட்ட விலையாகும்.
10 நாட்களில் தங்கம் விலை: கடந்த 10 நாட்களில் 22 கேரட் தங்கம் விலை சராசரியாக ரூ 7164-க்கு விற்பனையானது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை சராசரியாக கிராம் ரூ 6,598-க்கு விற்பனையானது. அது போல் கொரோனா காலகட்டத்தில் சராசரியாக ஒரு கிராம் தங்கம் ரூ 5,172 முதல் ரூ 5,344 வரை விற்பனையானது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications