Gold Rate Today: என்னதான் இழுத்தாலும் 50 ஆயிரத்திற்கு கீழ் வரமாட்டேங்குதே! தங்கம் விலை கிடுகிடு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.3) சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
சென்னையில் டிசம்பர் 3 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன் தினம் (நவம்பர் 30) விற்கப்பட்ட விலைக்கே தங்கம் விற்பனையானது. அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் 57,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் ரூ 7150 -க்கும் விற்கப்பட்டது. அது போல் வெள்ளியின் விலை கிராம் ரூ 100- க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்புர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது.
சென்னையில் நவம்பர் 30-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்தது. இதனால் சவரன் ரூ 57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,150-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.
ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications