Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று சரிவு! எப்போதுதான் சவரன் 50 ஆயிரத்திற்கு கீழ் வரும்?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2720 குறைந்த நிலையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நவம்பர் 16 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 15 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 55,560 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,945 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது தங்கம் விலை ரூ 56 ஆயிரத்திற்கு கீழும் வெள்ளியின் விலை ரூ 100க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 குறைந்தது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்பட்டது.அது போல் கிராமுக்கு ரூ 110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 13-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,045 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,680 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 135 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,085 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்தது. இன்று ரூ 320 சரிவை அடுத்து மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ 1840 குறைந்துள்ளது.
சென்னையில் நவம்பர் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ 103-க்கு விற்பனையான நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனையானது.
அது போல் கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது. சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,200க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.
ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
பொதுவாக சேமிப்பு என்பது ஒரு பொருளின் மீதான மூலதனம்தான். அந்த வகையில் வீடு, வாசல், நில புலம் வாங்குவது போல் நகை நட்டையும் வாங்கி வைத்தால் அது எந்த காலத்திலும் நமக்கு நஷ்டத்தை கொடுக்காது என்பதுதான் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் சேமிப்புக்கான டிப்ஸ் ஆகும்.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications