Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: சென்னையில் 4 நாட்களில் சவரனுக்கு ரூ 2720 சரிந்த தங்கம் விலை! இனி இதுதான் பேட்டர்ன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2720 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நவம்பர் 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate gold price

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ரூ 56 ஆயிரத்திற்கு கீழும் வெள்ளியின் விலை ரூ 100க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இது போல் விலை குறையும் என்கிறார்கள்.

சென்னையில் நவம்பர் 13 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,045 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,680 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 135 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,085 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்தது. இன்று ரூ 320 சரிவை அடுத்து மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ 1840 குறைந்துள்ளது.

சென்னையில் நவம்பர் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ 103-க்கு விற்பனையான நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனையானது.

அது போல் கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது. சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,200க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.

ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.

பொதுவாக சேமிப்பு என்பது ஒரு பொருளின் மீதான மூலதனம்தான். அந்த வகையில் வீடு, வாசல், நில புலம் வாங்குவது போல் நகை நட்டையும் வாங்கி வைத்தால் அது எந்த காலத்திலும் நமக்கு நஷ்டத்தை கொடுக்காது என்பதுதான் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் சேமிப்புக்கான டிப்ஸ் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+